ஜெர்மனி மெட்ரோ நிறுவனத்தின் ஐடி பிரிவை கைப்பற்றியது விப்ரோ.. 700 மில்லியன் டாலர் டீல்..!

இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான விப்ரோ ஜெர்மன் நாட்டின் உணவு சேவை நிறுவனமான மெட்ரோ ஏஜி நிறுவனத்தின் ஐடி சேவை பிரிவை சுமார் 700 மில்லியன் டாலருக்கு கைப்பற்றியுள்ளது. இந்த ஒப்பந்தம் விப்ரோ நிறுவன முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் மதிப்பைக் கொடுத்துள்ளது.

செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் விப்ரோ நிறுவனத்தின் சக போட்டி நிறுவனமான இன்போசிஸ் டயாம்லர் நிறுவனத்தின் கிளவுட் சேவைக்கான ஒப்பந்தம் பெற்ற நிலையில் தற்போது விப்ரோ நிறுவனம் ஜெர்மன் நிறுவன வர்த்தகத்தைக் கைப்பற்றிப் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் கடுமையான போட்டியை உருவாக்கியுள்ளது.

700 மில்லியன் டாலர் ஒப்பந்தம்

700 மில்லியன் டாலர் ஒப்பந்தம்

விப்ரோ - மெட்ரோ ஏஜி நிறுவனங்கள் மத்தியிலான ஒப்பந்தம் மூலம் மெட்ரோ நிறுவனத்தின் ஜெர்மனி மற்றும் ரோமானியாவில் இருக்கும் ஐடி சேவைளை முழுமையாகக் கைப்பற்ற உள்ளது. 700 மில்லியன் டாலர் மதிப்பிலான இந்த 5 வருட ஒப்பந்தம் அடுத்த 4 வருடங்களுக்கு நீட்டிக்கப்பட்டால் இந்த ஒப்பந்த மதிப்பு 1 பில்லியன் டாலர் வரையில் உயரும்.

ஏப்ரல் 30

ஏப்ரல் 30

விப்ரோ - மெட்ரோ ஏஜி ஒப்பந்தத்தின் படி ஏப்ரல் 30, 2021க்குள் வர்த்தகக் கைமாற்றம் முழுமையாக முடியும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தப் பரிமாற்றத்தை EY-Parthenon நிறுவன தலைமையில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

1,300 ஊழியர்கள்

1,300 ஊழியர்கள்

இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக மெட்ரோ நிறுவனத்தின் ஜெர்மனி, ரோமானியா மற்றும் இந்தியா ஆகிய அலுவலகத்தில் பணியாற்றும் சுமார் 1,300 ஊழியர்கள் விப்ரோ நிறுவனத்திற்கு மாற்றப்பட உள்ளனர். இப்படி மாற்றப்படும் ஊழியர்களுக்குப் புதிய வேலைவாய்ப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பணியாற்றும் வாய்ப்பு எனப் பல புதிய வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத்தில் ஈடுப்படுத்தப்பட உள்ளனர்.

விப்ரோ-வின் ஐடி சேவைகள்

விப்ரோ-வின் ஐடி சேவைகள்

மேலும் அடுத்த 5 வருட காலத்தில் விப்ரோ, மெட்ரோ நிறுவனத்திற்குத் தொழில்நுட்பம், இன்ஜினியரிங் மற்றும் சேவைகளை வழங்க உள்ளது. இதை மெட்ரோ நிறுவனத்தின் உணவு துறை வர்த்தகத்தில் மட்டும் அல்லாமல் ஹோட்டல், ரெஸ்டாரென்ட் மற்றும் சமையல் துறையிலும் பயன்படுத்த உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புதிய டிஜிட்டல் இன்னோவேஷன் ஹப்

புதிய டிஜிட்டல் இன்னோவேஷன் ஹப்

இதைத் தொடர்ந்து மெட்ரோ நிறுவனத்திற்குச் சேவை அளிப்பதற்காகவும், ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய சந்தையில் இருந்து அதிகளவிலான டிஜிட்டல் வர்த்தகத்தைப் பெற வேண்டும் எனத் திட்டத்துடன் விப்ரோ ஜெர்மனி நாட்டின் Dusseldorf பகுதியில் புதிய டிஜிட்டல் இன்னோவேஷன் ஹப்-ஐ அமைக்கும் திட்டத்தை விப்ரோ செயல்படுத்த உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+