இந்திய ஐடி சேவை துறையில் மந்தநிலை உருவாக உள்ளதாக பல கணிப்புகள் வந்திருக்கும் வேளையில் டிசிஎஸ் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அனைத்து அசோசியட் ஊழியர்களையும் வாரத்தில் 5 நாட்களும் அலுவலகம் வர வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது. ஏற்கனவே கூறியது போல் பிற ஐடி சேவை நிறுவனங்களும் தனது ஊழியர்களை வாரத்தில் 5 நாட்களும் வர அழைக்க துவங்கியுள்ளது.
டிசிஎஸ் அறிவிப்பை தொடர்ந்து விப்ரோ, கேப்ஜெமினி, LTIMindtree ஆகியவை தனது ஊழியர்களை வாரத்தில் 5 நாட்களும் வர வேண்டும் என அறிவிக்க துவங்கியுள்ளது அல்லது வாரத்தில் 3- 4 நாட்கள் கட்டாயம் அலுவலகம் வர வேண்டும் என்ற விதிமுறையை கொண்டு வர துவங்கியுள்ளது. இதன் மூலம் ரிமோட் வொர்க், வொர்க் ப்ரம் ஹோம் என பேச்சுகே இடமில்லை என்ற நிலைமை உருவாகியுள்ளது.

விப்ரோ, கேப்ஜெமினி, LTIMindtree நிறுவனங்களில் அணி வாரியாக, ப்ராஜெக்ட் வாரியாக வர்த்தக மாடலுக்கு ஏற்ப ஊழியர்களுக்கு அழைப்பு விடுக்க துவங்கப்பட்டு உள்ளது. இது வொர்க் ப்ரம் ஹோம் தான் வேண்டும் என வேலை வாங்கிய பலருக்கு பெரும் பிரச்சனையாக அமையலாம்.
டிசிஎஸ் அறிவிப்புக்கு பின்பு இந்தியாவில் பல ஐடி மற்றும் BPM நிறுவனங்களும், சில டெக்னாலஜி நிறுவனங்கள் வாய்மொழியாகவும், அதிகாரப்பூர்வமாக ஊழியர்களுக்கு கட்டாயம் வாரத்தில் 5 நட்களும் அலுவலகங்களுக்கு வர வேண்டும் என அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
ஒட்டுமொத்த ஐடி துறையும், தற்போது சர்வதேச அளவில் நடக்கும் மேக்ரோ எக்னாமிக் பொருளாதார பிரச்சனையின் காரணமாக புதிய வர்த்தகத்தை பெறுவதில் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில் ஐடி ஊழியர்களை வைத்து தற்போது இருக்கும் வாடிக்கையாளர்களிடம் இருந்து கூடுதல் வர்த்தகத்தையும், வருமானத்தையும் ஈர்க்க திட்டமிட்டு உள்ளது. இதனாலேயே அனைத்து ஊழியர்களையும் அலுவலகம் வரவைப்பதில் உறுதியாக உள்ளது.
மேலும் புனே, பெங்களூர் போன்ற நாட்டின் பல ஐடி ஹப்-களில் இருக்கும் நிறுவனங்கள் வாரத்தில் 5 நாட்கள் அலுவலகம் வர வேண்டும் என அறிவித்துள்ளது. இதில் முன்னோடியாக இந்தியாவில் இருக்கும் பல வெளிநாட்டு நிறுவனங்கள் ஊழியர்களை அலுவலகங்களுக்கு வர வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. சமீபத்தில் எரிக்சன் மற்றும் பின்சர்வ் ஆகியவை இப்பட்டியலில் சேர்ந்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications