மூன்லைட்டிங் என்ற வார்த்தையை சமீபத்திய மாதங்களாக நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். குறிப்பாக விப்ரோ மூன்லைட்டிங்கினை சுட்டிக் காட்டி பணி நீக்கம் செய்த பின்னர் பெரும் விவாதமே எழுந்தது.
இன்றும் மூன்லைட்டிங் என்பது சரியா தவறா என்ற விவாதம் இருக்கத்தான் செய்கின்றது.
இந்த நிலையில் தான் விப்ரோவின் தலைமை செயல் அதிகாரியும்,நிர்வாக தலைவருமான தியரி டெலாபோர்ட், மூன்லைட்டிங் குறித்து தனது கருத்தினை தெளிவுபடுத்தியுள்ளார்.
நிறுவனம் ஏற்றுக் கொள்ளாது?
தியரி டெலாபோர்ட் ஊழியர்கள் அங்கும் இங்கும் பணிபுரிந்தாலும் நிறுவனம் நன்றாகத் தான் உள்ளது. ஆனால் நிறுவனம் அதனை ஏற்றுக் கொள்ளாது என கூறியுள்ளார். இது விப்ரோவின் தலைவர் ரிஷாத் பிரேம்ஜியின் பணி நீக்க நடவடிக்கைக்கு பிறகு இந்த கருத்து வந்துள்ளாது.
ஒப்பந்தம் உள்ளது?
இங்கு ஊழியர்கள் மதிக்க வேண்டிய ஒப்பந்தங்கள் உள்ளன. அதனை தாண்டி ஊழியர்கள் மற்றொரு வேலைக்கு செல்வதை எப்படி ஏற்க முடியும். நாங்கள் அதனை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என தெளிவுபட கூறியுள்ளார்.
இதனை விப்ரோவின் இரண்டாம் காலாண்டு முடிவுக்கு பின்னராக செய்தியாளர் சந்திப்பில் தியரி கூறியுள்ளார்.
இது சரியானது அல்ல
விப்ரோ வேலை வாய்ப்பு ஒப்பந்தம் பணியாளர்கள் நிறுவனத்திற்காக வேலை நேரத்தினை ஒதுக்குவதோடு மட்டும் அல்லாது, குடும்பத்தினருக்காகவும் நேரத்தினை ஒதுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறது. ஒரு சிலர் அங்கும் இங்கும் வேலை பார்த்தாலும், நாங்கள் நன்றாகத் தான் இருக்கிறோம். இது வித்தியாசமானது. நீங்கள் நிறுவனத்தில் பணிபுரிகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். இது ஒரு சட்டபூர்வமான கேள்வி அல்ல. இது ஓரு நெறிமுறை கேள்வி. ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளை செய்வது சரியானது அல்ல என நாங்கள் நம்பவில்லை.
நிறுவனம் புதியதாக எதையும் செய்யவில்லை
நிறுவனம் புதிதாகவோ அல்லது வித்தியாசமாகவோ எதையும் செய்யவில்லை. ஆனால் ஒப்பந்தத்தின் உள்ள உட்பிரிவுகளின் படி உள்ளது. விப்ரோவில் நீங்கள் இணையும்போது அது உங்களுக்கு தெளிவாக தெரியும். நான் இரண்டாம் வேலை பற்றி பேசவில்லை. ஆனால் முரண்பாட்டினைத் பற்றி பேசுகிறேன். எங்கள் ஊழியர்கள் அதனை புரிந்து கொள்கிறார்கள் என்றும் தியரி சுட்டிக் காட்டியுள்ளார்.
ரிஷாத் பிரேம்ஜி
விப்ரோவின் தலைவர் ரிஷாத் பிரேம்ஜி, கடந்த ஆகஸ்ட் 20 அன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஊழியர்கள் நிறுவனத்திற்கு உண்மையாக இருக்க வேண்டும். இல்லையெனில் இங்கிருந்து செல்ல வேண்டும். இது வெரி சிம்பிள் லாஜிக் என தனது ட்விட்டர் பக்கத்தில் வெளிப்படையாக கூறியிருந்தார். இது ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியினை ஏற்படுத்தியிருந்தது.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!



Click it and Unblock the Notifications