விப்ரோவின் சிஇஓ ஸ்ரீனிவாஸ் பல்லியா வருடம் சுமார் ரூ.50 கோடி சம்பளம் வாங்குவதன் மூலம் ஐடி துறையில் அதிக சம்பளம் வாங்கும் இரண்டாவது சிஇஓ என்ற பெருமையைப் பெறுகிறார்.
ஏப்ரல் 29ஆம் தேதியன்று ஸ்ரீனிவாஸ் பல்லியாவின் அடிப்படை சம்பளம் 1.75 மில்லியன் டாலரில் இருந்து 3 மில்லியன் டாலர்களாக இருக்கும் என்று அறிவித்தது. அத்துடன் வேரியபிள் சம்பளமும் 1.75 மில்லியன் டாலரில் இருந்து 3 மில்லியன் டாலர்களாக இருக்கும் என்று விப்ரோ அறிவித்தது.

பல்லியாவுக்கு முன்பு விப்ரோ சிஇஓவாக இருந்த தியரி டெலாபோர்ட்டுக்கு இந்தியாவின் 6 டாப் ஐடி நிறுவனங்களில் தரப்பட்ட மிக அதிகபட்ச சம்பளமாக 2022-23 நிதியாண்டில் ரூ.82.4 கோடி வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு டெலாபோர்ட் பதவி விலகியதும் ஸ்ரீனிவாஸ் பல்லியாவை நிறுவனத்தின் சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குநராக விப்ரோ நியமித்தது.
இப்போது இன்போசிஸ் சிஇஓ சலில் பரேக் வருடம் ரூ.56 கோடி சம்பளம் பெற்று முதலிடத்தில் உள்ளார். அடிப்படை சம்பளமாக ரூ.6.67 கோடியை சலில் பரேக் பெற்றார். ரூ.45 லட்சம் ஓய்வூதியப் பலனாகவும், ரூ.18.73 கோடி வேரியபிள் சம்பளமாகவும் ரூ.30.6 கோடி அவரது ஆர்எஸ்யூவுக்காகவும் வழங்கப்பட்டது.
ஹெச்சிஎல் டெக்கின் சிஇஓ சி.விஜயகுமாருக்கு 2022-23 நிதியாண்டில் ரூ.28.4 கோடி சம்பளமாக வழங்கப்பட்டது. இதில் ரூ.16.44 கோடி அடிப்படை சம்பளமாகவும், ரூ.11.8 கோடி செயல்சார்ந்த போனஸாகவும் ரூ.24 லட்சம் பிற படிகளுக்கும் அளிக்கப்பட்டது. 2024 நிதியாண்டில் விஜயகுமார் சம்பளம் இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
விஜயகுமாருக்கு அடுத்தபடியாக எல்டிஐ மைண்ட்ட்ரீ அதன் சிஇஓ தேபாசிஷ் சாட்டர்ஜிக்கு ரூ.17.5 கோடியை சம்பளமாக வழங்கியது. 2022 நவம்பரில் எல் அண்டு டி-யும் மைண்ட்ட்ரீ-யும் இணைக்கப்பட்ட பின்னர் தேபாசிஷ் சாட்டர்ஜி சிஇஓவாக நியமிக்கப்பட்டார்.
அவரது சம்பளத்தில் அடிப்படை சம்பளமாக ரூ.8.5 கோடியும் வேரியபிள் சம்பளமாக ரூ.8.8 கோடியும் தரப்பட்டது.
அடுத்தது டெக் மகிந்திராவின் மோஹித் ஜோஷி ஆண்டுக்கு ரூ.6.5 கோடி வருடாந்திர சம்பளமாகத் தரப்பட்டது. அத்துடன் வருடாந்திர பெர்பாமன்ஸாக 70 சதவீதம் வேரியபிள் சம்பளம் வழங்கப்படும்.
இதன்மூலம் அவரது வருட சம்பளம் ரூ.17.5 கோடி ஆகும்.
கூடுதலாக ஒருமுறை பங்கு ஒதுக்கீடாக ரூ.20.6 கோடி வழங்கப்படும்.
மேலும் அவருக்கு ஸ்டாக் ஆப்ஷனாக ரூ.28.8 கோடி பணியிலிருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
இந்தியாவின் டாப் ஐடி நிறுவனங்களில் ஒன்றான டாடா கன்சல்டன்சி சர்வீஸஸ் சிஇஓ கே.கீர்த்திவாசன் மாதம் அடிப்படை சம்பளமாக ரூ.10 லட்சம் அளிக்கப்படும். இது ரூ.16 கோடி வரை உயரும். இதன்மூலம் வருடம் அவருக்கு ரூ.1.9 கோடி கிடைக்கும்.
Story written by: I.jayachandran
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications