இந்தியாவின் 4வது பெரிய ஐடி சேவை நிறுவனமான விப்ரோவின் புதிய சிஇஓ ஸ்ரீனிவாஸ் பாலியா-வின் நியமனத்தை தொடர்ந்து இந்நிறுவனத்தில் அதிரடி மாற்றங்கள் நடந்து வருகிறது. இதுநாள் வரையில் வெளிநாட்டவரான தியரி டெலாபோர்ட்டே சிஇஓ-வாக இருந்த நிலையில் விப்ரோ பெரிய அளவிலான வளர்ச்சியை பதிவு செய்யவில்லை.
இதன் காரணமாக தியரி டெலாபோர்ட்டே-வை பணிநீக்கம் செய்க விப்ரோ அமெரிக்க வர்த்தக பிரிவின் தலைவராக இருந்த ஸ்ரீனிவாஸ் பாலியா-வை புதிய சிஇஓ-வாக நியமித்தது. இதை தொடர்ந்து ஸ்ரீனிவாஸ் பாலியா பல மாற்றங்களையும், மறுசீரமைப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.

ஸ்ரீனிவாஸ் பாலியா-வின் அதிரடி நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக
விப்ரோ, தனது துணை நிறுவனங்களை மறுசீரமைக்கும் பணியில் இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஜூன் 27 ஆம் தேதி, தனது வட அமெரிக்க துணை நிறுவனமான டிசைனிட் நார்த் அமெரிக்கா இன்க். (Designit North America, Inc.) ஐ, விப்ரோ டிசைனிட் சர்வீசஸ் இன்க். (Wipro Designit Services, Inc.) உடன் இணைப்பதாக அறிவித்துள்ளது.
டிசைனிட் மற்றும் விப்ரோ டிசைனிட் மத்தியிலான இணைப்பு ஜூலை 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது என்று நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஜூன் 26 ஆம் தேதி முதல், விப்ரோ தனது மற்றொரு துணை நிறுவனமான அட்டூன் ஆஸ்திரேலியா பிட்டி லிமிடெட் (Attune Australia Pty Ltd) ஐயும் விப்ரோ நிறுவனம் பதிவு செய்யப்பட்டதை ரத்து செய்தது.
இணைக்கப்பட்ட நிறுவனங்களின் நிதி நிலவரத்தைப் பார்க்கும்போது, விப்ரோ டிசைனிட் சர்வீசஸ் இன்க். நிறுவனத்தின் வருவாய் 48 மில்லியன் டாலராக உள்ளது. இதுவே டிசைனிட் நார்த் அமெரிக்கா இன்க். நிறுவனத்தின் வருவாய் 2024 மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி 1.6 மில்லியன் டாலர்களாக இருந்தது.
ஆஸ்திரேலியாவில் இருந்த துணை நிறுவனமான அட்டூன் ஆஸ்திரேலியா பிட்டி-ன் செயல்பாட்டு வருவாய் 2024 மார்ச் 31 ஆம் தேதி முடிவில், 269,554 ஆஸ்திரேலிய டாலராக இருந்தது. இந்தத் துணை நிறுவனத்தை தற்போது விப்ரோ கிட்டத்தட்ட மூடியுள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம், லாபம் குறைவான அல்லது லாபம் ஈட்டாத துணை நிறுவனங்களை விற்பனை செய்தல் அல்லது இணைத்தல் போன்ற நடவடிக்கைகளை விப்ரோ நிறுவனம் மேற்கொண்டு வருகிறது என்பது தெளிவாகிறது. இதன் மூலம் நிறுவனத்தின் செயல்பாட்டுச் செலவைக் குறைத்து லாபத்தை அதிகரிப்பதே ஸ்ரீனிவாஸ் பாலியா-வின் நோக்கம்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications