பெரும்பாலான இளைஞர்கள் ஐ.டி. நிறுவனங்களில் வேலை பார்க்க அதிக ஆர்வமாக உள்ளனர். இதற்கு முக்கிய காரணம் ஐ.டி. நிறுவனங்கள் கொடுக்கும் சம்பளம்தான், மற்ற துறைகளை காட்டிலும் ஐ.டி. துறையில் சம்பளம் அதிகம்.
இதேவேளையில் ஐ.டி. நிறுவனங்களில் அதிக சம்பளம் பெறுபவர்கள் பெரும்பாலும் தலைமை செயல் அதிகாரிகளாக இருப்பர். இந்தியாவின் ஐ.டி. துறையில் அதிக சம்பளம் பெறும் தலைமை நிர்வாக அதிகாரி பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் விப்ரோவின் தலைமை செயல் அதிகாரி தியரி டெலாபோர்ட்.

விப்ரோ நிறுவனம் பங்குச் சந்தையில் தாக்கல் செய்த அறிக்கையின்படி, தியரி டெலாபோர்ட் கடந்த 2022-23ம் நிதியாண்டுக்கு சம்பளமாக ரூ.82 கோடி வாங்கியுள்ளார். நாட்டின் முன்னணி ஐ.டி. சேவை நிறுவனங்களான டி.சி.எஸ்., இன்போசிஸ் மற்றும் எச்.சி.எல். டெக்னாலஜிஸ் ஆகிய நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளின் சம்பளத்தை காட்டிலும் தியரி டெலாபோர்டுக்கு விப்ரோ நிறுவனம் அதிக சம்பளத்தை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் 2வது இடத்தில் இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சலில் பரேக் உள்ளார். இவர் கடந்த ஆண்டு ரூ.56.45 கோடியை ஊதியமாக பெற்றுள்ளார்.
டெக் மகிந்திராவின் சிபி குர்னானி மற்றும் டி.சி.எஸ். நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக அதிகாரி ராஜேஷ் கோபிநாத் முறையே ரூ.30 கோடி மற்றும் ரூ.29 கோடி சம்பாதித்துள்ளனர்.
ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் அதிக சம்பளம் பெறும் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இயக்குனராக ஜீரோதா நிறுவனத்தின் நிறுவனர்கள் நிதின் காமத் மற்றும் நிகில் காமத் உள்ளனர். இவர்கள் கடந்த ஆண்டு தலா ரூ.72 கோடி சம்பளமாக வீட்டுக்கு எடுத்து சென்றனர்.
தியரி டெலாபோர்ட்
2020 ஜூலை முதல் நாட்டின் நான்காவது பெரிய ஐ.டி. நிறுவனமான விப்ரோவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இயக்குனராக தியரி டெலாபோர்ட்பணியாற்றி வருகிறார். அதற்கு முன்பு பிரான்ஸ் ஐ.டி. நிறுவனமான கேப்ஜெமினியில் சி.இ.ஓ.வாக இருந்தார்.
56 வயதான இவர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர். சர்வதேச தகவல் தொழில்நுட்ப துறையில் நுணுக்கமான அறிவு மற்றும் 30 ஆண்டு கால அனுபவம் கொண்டவர். கடந்த 2022-23ம் நிதியாண்டில் விப்ரோ நிறுவனம் இவருக்கு ஆண்டு சம்பளமாக ரூ.82.40 கோடியை வழங்கியது.
1945ல் முகமது பிரேம்ஜியால் விப்ரோ நிறுவனம் தொடங்கப்பட்டது. அவரது மறைவுக்கு பிறகு, அந்த நிறுவனத்தை இந்திய கோடீஸ்வரர்களில் ஒருவரும், நன்கொடையாளருமான அசிம் பிரேம்ஜியால் கையகப்படுத்தப்பட்டது.
தற்போது அவர் இயக்குனர் குழுவில் நிர்வாகமற்ற உறுப்பினராக உள்ளார். அவரது மகன் ரிஷாத் பிரேம்ஜி தற்போது விப்ரோவின் செயல் தலைவராக உள்ளார். மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே விப்ரோ நிறுவன பங்கின் விலை ரூ.420 என்ற அளவில் உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications