இந்திய ஐடி சேவை துறையின் 4வது பெரிய நிறுவனமான திகழும் விப்ரோ கடந்த சில வருடங்களாகவே அதிகப்படியான பிரச்சனைகளை எதிர்கொண்டு வந்தது மட்டும் அல்லாமல் நிறுவனத்தின் வளர்ச்சியில் பெரும் தொய்வு ஏற்பட்டு வந்தது. சமீபத்தில் விப்ரோ நிறுவனத்தின் தலைமை நிதியியல் அதிகாரி வெளியேறியது பெரும் சர்ச்சையானது மட்டும் அல்லாமல் அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.
விப்ரோ நிறுவனத்தின் வளர்ச்சிக்காக பெரும் நம்பிக்கையுடனும், பெரும் சம்பளத்துடன் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட தியரி டெலாபோர்ட் சனிக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என விப்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜூலை 6, 2020 அன்று உலகளாவிய தகவல் தொழில்நுட்பம், கன்சல்டிங் மற்றும் வணிக செயல்முறை சேவைகளை வழங்கும் மாபெரும் டெக் நிறுவனமான விப்ரோ-வின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராகப் பொறுப்பேற்றார் தியரி டெலாபோர்ட்.
விப்ரோ நிறுவனத்திற்குச் சேர்வதற்கு முன்பு தியரி டெலாபோர்ட், கேப்ஜெமினி குழுமத்திலிருந்து நிறுவனத்தில் முக்கிய பதவியில் பணியாற்றினார். அவர் கேப்ஜெமினி-யின் நிர்வாகக் குழுவின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் உறுப்பினராகவும் பணியாற்றினார்.
ஜூன் 1, 2020 அன்று தலைமைப் பொறுப்பிலிருந்து விலகிய அபிதாலி நீமுச்வாலா இடத்தில் தியரி டெலாபோர்ட் அமர்ந்தார். இவர் பதவிக்கு வந்த உடனேயே உயர்மட்ட நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்களைச் செய்தார். இதனால் பெரிய அளவில் வர்த்தகம், வருவாயில் வளர்ச்சி இருக்கும் என நினைத்தால் நிலைமை தலைகீழாக மாறியது.
3வது இடத்தில் இருந்த விப்ரோ 4வது இடத்திற்குச் சரிந்தது, வருவாய், லாபம் அனைத்திலும் வீழ்ச்சி, ஊழியர்கள் வெளியேற்றம் என பல பிரச்சனைகளுக்கு வழிவகுத்தது. இந்திய ஐடி நிறுவனத்தில் இருக்கும் ஓரே வெளிநாட்டுத் தலைவராக இருந்தார் தியரி டெலாபோர்ட், இவர் பதவியில் இருந்த காலம் வரையில் இவர் தான் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் சிஇஓ-வாக இருந்தார்.
தியரி டெலாபோர்ட் வெளியேற்றம் விப்ரோவில் இருந்து வெளியேறும் உயர்மட்ட அதிகாரிகள் வெளியேறியதன் தொடர்ச்சியாக இந்த செய்தி வந்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில், நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ஜதின் தலால் பதவி விலகினார், அவருக்கு பதிலாக அபர்ணா சி ஐயர் நியமிக்கப்பட்டார். தலால் நிறுவனத்தில் இருந்து விலகுவதற்கு முன் 21 ஆண்டுகால தொழில் வாழ்க்கையைக் கொண்டிருந்தார்.
தற்போது விப்ரோ நிறுவனத்தின் அமெரிக்காஸ் 1 வர்த்தக பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஸ்ரீனிவாஸ் பாலியா, ஏப்ரல் 7 முதல் புதிய தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராகப் பொறுப்பேற்பார் என்று நிறுவனம் மேலும் கூறியது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications