இந்தியாவின் 4வது பெரிய ஐடி சேவை நிறுவனமான விப்ரோவின் தலைமைச் செயல் அதிகாரி தியரி டெலாபோர்ட் சனிக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்ததாக விப்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் விப்ரோ நிறுவனத்தின் அமெரிக்காஸ் 1 வர்த்தக பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஸ்ரீனிவாஸ் பாலியா, ஏப்ரல் 7 முதல் புதிய தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராகப் பொறுப்பேற்பார் என்றும் விப்ரோ நிறுவனம் கூறியது.

விப்ரோ நிறுவனம் சனிக்கிழமையன்று வெளியிட்ட அறிக்கையில், அதன் தலைமை நிர்வாக அதிகாரி தியரி டெலாபோர்ட் தனது சொந்த காரணத்திற்காக, விப்ரோவில் இருந்து வெளியேறி தனது முயற்சிகளை தொடர முடிவு செய்துள்ளதாகவும், இதற்காக உடனடியாக நிறுவனத்தை விட்டு வெளியேறுவதாகக் கூறியது.
மேலும் தியரி டெலாபோர்ட்-க்கு பதிலாக நிறுவனத்தின் அமெரிக்கத் வர்த்தக பிரிவின் தலைவரான ஸ்ரீனி பாலியா நியமிக்கப்படுவார் என்று நிறுவனம் பங்குச்சந்தையில் சமர்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
விப்ரோவில் தியரியின் தலைமைத்துவ பணியில் ஆற்றிய பணிக்கு எனது நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன். அவர் செயல்படுத்திய மாற்றங்கள் எதிர்காலத்தில் நிறுவனத்தை சிறப்பாக வர்த்தக சந்தையில் நிலைநிறுத்தியுள்ளன என்று நிறுவனத்தின் தலைவர் ரிஷாத் பிரேம்ஜி விப்ரோ சார்பாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தியரி டெலாபோர்ட் இன்று பதவியை ராஜினாமா செய்த நிலையில், மே 31, 2024 அன்று வணிக நேரம் முடிவடையும் வரை அவர் நிறுவனத்தில் பணியாற்றுவார். இக்காலகட்டத்தில் நிர்வாகம் ஸ்ரீனி பாலியா கைக்கு மாறுவதற்கு உதவி செய்வார். மே 31, 2024 மாலை பணிநேரத்திற்கு பின்பு தியரி டெலாபோர்ட் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார் என்று நிறுவனத்தின் தாக்கல் கூறுகிறது.
விப்ரோ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக ஸ்ரீனி பாலியாவை நியமிப்பதாக வந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வரும் காரணத்தால் ஸ்ரீனி தலைமை நிர்வாக பணியின் பொறுப்பை உடனடியாக ஏற்றுக்கொள்கிறார்.
தியரி டெலாபோர்ட் தனது 5 ஆண்டு பதவிக்காலம் முடிவடைவதற்கு 14 மாதங்களுக்கு முன்பு பதவி விலகியுள்ளார். அவர் ஜூலை 6, 2020 அன்று விப்ரோவின் CEO மற்றும் MD ஆகப் பொறுப்பேற்றார், மேலும் அவரது 5 ஆண்டு பதவிக்காலம் ஜூலை 2025 இல் முடிவடைய இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜூலை 2023 AGM இல் அசிம் பிரேம்ஜி விப்ரோ நிறுவனத்தின் நிலை மீது அதிருப்தி அடைந்ததாகத் தகவல் வந்தன. இந்த செய்தி அப்போது பெரியதாகப் பிரச்சனையாக இருந்த வேளையில், இது உயர்மட்ட நிர்வாகத்திற்குள் விவாதிக்கப்பட்ட செய்தியாகவே இருந்தது. தற்போது இவருடைய ராஜினாமா பலருக்கும் ஆச்சரியத்தை அளிக்கிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications