இந்தியாவின் 4வது பெரிய ஐடி சேவை நிறுவனமான விப்ரோ-வின் தலைமை நிதியியல் அதிகாரியான ஜதின் தலால் இந்நிறுவனத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய நிலையில் தற்போது புதிய வாய்ப்புகளைத் தொடர அவருடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
சமீபத்தில் இந்தியா ஐடி சேவை நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் அடுத்தடுத்து வெளியேறுவது மட்டும் அல்லாமல் போட்டி நிறுவனங்களின் சிஇஓ ஆகவும் வெளிநாட்டு நிறுவனங்களின் இந்திய அலுவலகத்தை தலைமை தாங்கும் பொறுப்பில் அமர்கிறார்கள். இதன் வாயிலாக இன்போசிஸ் மோஹித் ஜோஷி முதல் பல ஊழியர்கள் பணியில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர்.

விப்ரோ நிறுவனத்தில் இருந்து முக்கியமான ஊழியர்கள் பலர் ஏற்கனவே ராஜினாமா செய்திருந்த நிலையில் தற்போது, தலைமை நிதியியல் அதிகாரியான ஜதின் தலால் இந்நிறுவனத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக மாற்றிய பின்பு புதிய வாய்ப்புக்காக ராஜினாமா செய்துள்ளார். இதை விப்ரோ நிறுவனம் பங்குச்சந்தையில் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தலைமை நிதியியல் அதிகாரியான ஜதின் தலால் இப்பதிவியில் இருந்து வெளியேறிய நிலையில் இந்நிறுவனத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அபர்ணா ஐயர், இவருக்கு பதிலாக இப்பதவியில் நியமிக்கப்பட்டு உள்ளார். அபர்ணா பணிகளை வருகிற செப்டம்பர் 22 முதல் தொடர்வார்.
இதுகுறித்து விப்ரோ தலைமை நிர்வாக அதிகாரி தியரி டெலாபோர்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த சில ஆண்டுகளாக விப்ரோ நிறுவனத்தின் நிதியியல் மாற்றத்தில் அபர்ணா ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறார், எங்கள் நிதி உத்தி மற்றும் திட்டமிடல், முதலீட்டு திட்டங்கள் மற்றும் மறுசீரமைப்பு முயற்சிகள் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஜதின் தலால் விப்ரோ நிறுவனத்தில் 2002 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார், 2015ல் இந்நிறுவனத்தின் ப்ரெசிடென்ட் மற்றும் சிஎப்ஓ ஆக நியமிக்கப்பட்டார். இவரின் கடைசி வேலை நாள் நவம்பர் 30.
இதேவேளையில் அபர்ணா 2003 ஆம் ஆண்டு விப்ரோ-வில் பணியில் சேர்ந்து நிதி துறையில் பல்வேறு பிரிவுகளிலும், சேவைகளிலும் பணியாற்றியுள்ளார். சமீபத்தில் உயர் துணை தலைவர் மற்றும் விப்ரோ FullStride Cloud பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.


Click it and Unblock the Notifications