விப்ரோ சொன்ன செம விஷயம்.. டிஜிட்டலுக்கு மாறும் வாடிக்கையாளர்கள்.. இனி வாய்ப்புகள் அதிகரிக்கும்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்வதேச அளவில் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஒவ்வொரு துறையும் பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றன.

 

அதிலும் இந்தியாவினை பொருத்தமட்டில் கொரோனாவிற்கு முன்பிருந்தே, பொருளாதார மந்த நிலையை சந்தித்து வந்த நிலையில், கிட்டதட்ட அனைத்து துறைகளும் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன.

எனினும் தகவல் தொழில்நுட்ப துறையானது சர்வதேச சந்தையினை பொறுத்து இருப்பதால், அது ஒரளவுக்கு வளர்ச்சிக் கண்டு வருகின்றது.

தங்கம் வாங்க இது செம சான்ஸ்.. 3% வீழ்ச்சிக்கு பிறகு தொடங்கிய ஏற்றம்.. மிஸ் பண்ணிடாதீங்க..!

செலவினங்கள் குறைப்பு

செலவினங்கள் குறைப்பு

இது குறித்து விப்ரோ நிறுவனத்தின் தலைவர் ரிஷாத் பிரேம்ஜி, சர்வதேச அளவில் பரவி வரும் கொரோனா பெருந்தொற்று நோயினால், ஐடி துறையானது சற்று பின்னடைவை சந்தித்துள்ளது. இதன் காரணமாக சர்வதேச அளவிலான வாடிக்கையாளர்கள், தங்களது செலவினங்களை குறைத்துள்ளனர். குறிப்பாக ஐடி துறைக்கு செலவிட வேண்டிய செலவினங்களை குறைத்துள்ளனர்.

நழுவி போன திட்டங்கள்

நழுவி போன திட்டங்கள்

எனினும் இதில் நடந்துள்ள நல்ல விஷயம் என்னவெனில், வாடிக்கையாளர்கள் தங்களது செலவினங்களை டிஜிட்டல் தொழில் நுட்பத்திற்காக செலவழித்து வருகின்றனர். இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் போடப்பட்டுள்ள லாக்டவுன் காரணமாக, விப்ரோ, டிசிஎஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜி, இன்ஃபோசிஸ் உள்ளிட்ட நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க வேண்டிய திட்டங்களில் தாமதம் ஏற்பட்டுள்ளன. இன்னும் சில புதிய திட்டங்கள் நழுவி போயுள்ளன.

சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்?
 

சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்?

நாம் உலகளாவிய நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். அந்த வாடிக்கையாளர்கள் தற்போது கொரோனாவால் சிரம்பப்படுகிறார்கள். அவர்கள் பல சவால்களை எதிர்கொள்கின்றனர். இதனால் அதன் எதிரொலி இத்துறையில் காணப்படுகிறது. இதனை நாம் முதல் காலாண்டிலேயே பார்த்துள்ளோம். எங்களது வாடிக்கையாளர்கள் இதனால் கணிசமாக அவர்களது செலவினங்களை குறைத்துள்ளனர் என்றும் பிரேம்ஜி, 47ஆவது ஆல் இந்தியா மேனேஜ்மென்ட் அசோசியேஷன் கூட்டத்தில் பேசியுள்ளார்.

பல புதிய ஒப்பந்தங்கள்

பல புதிய ஒப்பந்தங்கள்

எனினும் இந்த லாக்டவுன் நடவடிக்கையானது வாடிக்கையாளர்களை, ஒரு புதிய மாடலுக்கு நகர்த்த தூண்டியது. இதனால் 90% அதிகமான ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி புரிந்து வருகின்றனர். மேலும் நாங்கள் பல புதிய ஒப்பந்தங்களையும் பதிவு செய்துள்ளோம். அதோடு இந்த லாக்டவுன் வாடிக்கையாளர்களை அணுகும் திறனையும் மாற்றியுள்ளது என்றும் கூறியுள்ளார்.

இது எனது தனிப்பட்ட விருப்பம்

இது எனது தனிப்பட்ட விருப்பம்

எப்படி இருப்பினும் இனி இந்த தொழில் துறையானது முந்தைய நிலைக்கு வராது எனவும் பிரேம்ஜி கூறியுள்ளார். அதோடு ஊழியர்கள் அலுவலகத்திற்கு திரும்ப வர வேண்டும். அப்போது தான் கலாச்சாரம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் இருக்கும், ஆக அவர்கள் திரும்ப வர வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பம் என்றும் கூறியுள்ளார்.

புதிய திட்டங்கள் அதிகரிக்கும் போது, வேலை வாய்ப்புகளும் பெருகும். இதனால் இந்திய ஐடி துறையினருக்கும் நிச்சயம் நல்ல விஷயம் காத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Wipro chairman said IT industry struggled as clients cut spends, but more activity in digital

Wipro chairman rishad premji said IT industry struggled as clients cut spends, but more activity in digital
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X