இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான விப்ரோ நாட்டின் 3வது பெரிய நிறுவனமாக இருந்து தற்போது 5வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. இதேவேளையில் இந்தியாவின் டாப் 5 ஐடி சேவை நிறுவனங்களில் வெளிநாட்டு நபரை சிஇஓ-வாக கொண்ட ஒரே நிறுவனமாக விப்ரோ உள்ளது.
ரிஷத் பிரேம்ஜி தலைமையிலான விப்ரோ கடந்த சில வருடங்களாக ஐடி சேவை துறையை தாண்டி தனது நுகர்வோர் வர்த்தகத்தையும் விரிவாக்கம் செய்து வருகிறது. இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நுகர்வோர் சந்தையில் விப்ரோ நிறுவனமும் முக்கிய இடத்தை பெற வேண்டும் என்பதற்காக மசாலா பொருட்கள், ரெடிமேட் உணவு பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களை வாங்கி வந்தது.

இந்த நிலையில் விப்ரோ கன்ஸ்யூமர் கேர் & லைட்டிங் (WCCL) பிரிவில் VVF லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து Jo, Doy மற்றும் Bacter Shield ஆகிய மூன்று சோப் பிராண்டுகளை வாங்கியுள்ளது. இது கடந்த ஆண்டில் விப்ரோ நிறுவனத்தின் மூன்றாவது நிறுவன கையகப்படுத்தல் ஆகும். இந்தியாவின் சோப் சந்தை சுமார் 28,000 கோடி ரூபாயாகும்.
ஜோ டாய்லெட் சோப்பு பிராண்ட் இந்தியாவில் வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கு சந்தைகளில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டு உள்ளது. இதேபோல் ஹிந்துஸ்தான் யூனிலீவரின் டவ் மற்றும் பியர்ஸுக்கு எதிராகப் போட்டியிடும் பிரீமியம் பிரிவில் செயல்படும் பிராண்ட் தான் Doy.
மேலும் பாக்டீரியா ஷீல்டு, சோப்பு மற்றும் ஹேண்ட்வாஷ் ஆகியவற்றின் பாக்டீரியா எதிர்ப்பு பிரிவில், Lifebuoy, Dettol மற்றும் Savlon உள்ளிட்ட பிராண்டுகள் உடன் இந்திய சந்தையில் போட்டிப்போடு வருகிறது.
VVF லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து Jo, Doy மற்றும் Bacteria Shield ஆகிய மூன்று சோப் பிராண்டுகள் 2023 ஆம் நிதியாண்டில் மொத்தமாக 210 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளது. இந்த 3 சோப் பிராண்டுகள் கைப்பற்றல் மூலம் விப்ரோ நிறுவனம் பர்சனல் வாஷ் பிரிவில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்கிறது.


Click it and Unblock the Notifications