விப்ரோ ஊழியர்கள் நிலைமை ரொம்ப மோசம்.. என்னவெல்லாம் நடக்குது பாருங்க..!

இந்திய தகவல் தொழில்நுட்ப துறையில் நிலவி வரும் வர்த்தக சவால்கள் தற்போது கடுமையான நிலைக்கு சென்றுள்ளது. அமெரிக்க மத்திய வங்கி ஜூன் மாதத்தில் வட்டி விகிதத்தை குறைக்கும் என நினைத்தால் பணவீக்கத்தின் போக்கு மோசமாக உள்ளது.

இந்த நிலையில் நாட்டின் நான்காவது மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான விப்ரோ நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கை 2024ஆம் நிதியாண்டில் 9.5% குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விப்ரோ ஊழியர்கள் நிலைமை ரொம்ப மோசம்.. என்னவெல்லாம் நடக்குது பாருங்க..!

கடந்த பத்தாண்டுகளில் மூன்றாவது முறையாக, விப்ரோ நிறுவனத்தில் ஒரு நிதியாண்டின் துவக்கத்தில் இருந்து ஊழியர்கள் எண்ணிக்கையை விட குறைவான ஊழியர் எண்ணிக்கையுடன் நிறைவு செய்துள்ளது.

2024ஆம் நிதியாண்டின் தொடக்கத்தில் 2,58,570 ஊழியர்களை கொண்டிருந்த விப்ரோ, நிதியாண்டின் இறுதியில் 2,34,054 ஊழியர்களுடன் மட்டுமே உள்ளனர். அதாவது, ஒரு வார காலத்தில் 24,516 ஊழியர்கள் குறைந்துள்ளனர். இது தொடர்ந்து ஆறாவது காலாண்டாக விப்ரோ நிறுவனத்தின் ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

மார்ச் காலாண்டில் ஊழியர் பயன்பாட்டு விகிதம் (utilization rate) மூன்றாம் காலாண்டின் 84% ல் இருந்து 86.9% ஆக உயர்ந்திருந்தாலும், ஊழியர் வெளியேற்ற விகிதம் (attrition rate) மூன்றாம் காலாண்டின் 14.2% ல் இருந்து எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்தது. முழு ஆண்டிலும் விப்ரோ நிறுவனத்தின் ஊழியர் வெளியேற்ற விகிதம் 14.2% ஆகவும், ஊழியர் பயன்பாட்டு விகிதம் 84.8% ஆகவும் உள்ளது.

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்கள் அனைத்தும் புதியாக ஊழியர்களை பணியில் சேர்க்காமல், பென்ச்சில் இருக்கும் ஊழியர்களை அதிகளவில் பயன்படுத்தி வருகிறது, இதனால் ஊழியர் பயன்பாட்டு விகிதம் அதிகரித்துள்ளது. மேலும் நிறுவனத்தை விட்டு வெளியேறிய ஊழியர்களின் இடத்தில் பென்ச் ஊழியர்கள் நியமிக்கப்பட்டும், அவர்களுக்கும் புதிய தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிக்கப்பட்டும் வருவதால் அட்ரிஷன் விகிதமும் குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு, விப்ரோ நிறுவனம் தனது வருடாந்திர மதிப்பீட்டு செயல்முறையை (appraisal process) 3 மாதம் தள்ளிவைத்த பின்னர், சம்பள உயர்வு செயல்பாட்டின் போது, அதிக ஊதியம் பெறும் சில சிறந்த செயல்பாட்டு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகியிருந்தன. மேலும், சம்பள உயர்வுக்கு தகுதியுடையவர்களில் குறைவான சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. இது ஊழியர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது மட்டும் அல்லாமல் அதிகளவிலான ஊழியர்கள் வெளியேற முக்கிய காரணமாக அமைந்தது.

விப்ரோவைப் போலவே, TCS நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கையும் 6,14,795ல் இருந்து 6,01,546 ஆக குறைந்துள்ளது. இதேபோல் இன்போசிஸ் நிறுவனத்தில் 3,43,234ல் இருந்து 317,240 ஆக குறைந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+