இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான விப்ரோ 2023-24 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பர் காலாண்டின் முடிவில் அதன் ஊழியர்களின் எண்ணிக்கை 5,000 க்கும் அதிகமாக குறைந்துள்ளது. ஏற்கனவே டிசிஎஸ், ஹெச்சிஎல், இன்போசிஸ் ஆகிய நிறுவனங்களில் ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்த நிலையில் விப்ரோ ஊழியர்கள் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
விப்ரோ நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் ஜூன் காலாண்டு இறுதியில் 249,758 ஆக இருந்த நிலையில் செப்டம்பர் காலாண்டு இறுதியில் 244,707 ஆகக் குறைந்துள்ளது. இதன் மூலம் விப்ரோ ஊழியர்கள் எண்ணிக்கை 5051 பேர் குறைந்துள்ளனர்.

நடப்பு நிதியாண்டின் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் TCS, Infosys மற்றும் HCLTech இன் நிகர பணியாளர்களின் எண்ணிக்கையும் 16,000-க்கும் அதிகமாக குறைந்தது குறிப்பிடத்தக்கது. இது ஐடி ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அமைந்தது.
எப்போதும் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல் நிறுவனங்களில் முதல் முறையாக ஓரே காலாண்டில் 3 நிறுவனத்திலும் ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஜூன் காலாண்டை ஒப்பிடுகையில் செப்டம்பர் காலாண்டில் டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல் நிறுவனங்களில் சுமார் 16,162 ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.
செப்டம்பர் காலாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தில் 6333 ஊழியர்களும், இன்போசிஸ் நிறுவனத்தில் 7530 ஊழியர்களும், ஹெச்சிஎல் நிறுவனத்தில் 2299 ஊழியர்களும் குறைந்துள்ளனர். இதேபோல் விப்ரோ நிறுவனத்திலும் ஊழியர்கள் எண்ணிக்கை 5051 பேர் குறைந்துள்ளனர்.
கடந்த காலாண்டில் 1,424,808 ஆக இருந்த நான்கு ஐடி மேஜர்களின் மொத்த எண்ணிக்கை செப்டம்பர் இறுதியில் 1,403,595 ஆக உள்ளது. சர்வதேச சந்தையில் பொருளாதார மந்த நிலை என்ற வைரஸ் பாதிப்பால் இந்திய ஐடி நிறுவனங்கள் பல முனையில் பாதிக்கப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications