விப்ரோ நிர்வாக தலைவரான ரிஷாத் பிரேம்ஜி தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக அவரது சம்பளத்தில் வேரியபிள் பே அல்லது கமிஷன்களை எடுத்துக்கொள்ளவில்லை என விப்ரோ நிர்வாகம் பங்குச்சந்தையில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அமெரிக்கப் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையத்திடம் (US Securities and Exchange Commission) விப்ரோ சமர்ப்பித்துள்ள 20-F படிவத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிஷாத் பிரேம்ஜி 2023 ஆம் நிதியாண்டில் ரூ.7.9 கோடி ( $951,353) வருடாந்திர சம்பளம் பெற்ற நிலையில், 2024 ஆம் நிதியாண்டில் இவரது சம்பளம் 20% வரை குறைக்கப்பட்டுள்ளது. இதன் படி, அவரது மொத்த சம்பளம் ரூ.6.5 கோடி ($769,456) ஆக உள்ளது.
2023 ஆம் நிதியாண்டில் அடிப்படை சம்பளமாக ரூ.7.2 கோடி ( $861,000) பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு அது ரூ.5.8 கோடி ( $692,641) ஆக குறைந்துள்ளது. மீதமுள்ள தொகை நீண்ட கால சம்பள திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பலன்கள் ஆகும்.
விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அஜிம் பிரேம்ஜியின் மகனான ரிஷாத் பிரேம்ஜி, தனது நிர்வாக தலைவர் பதவிக்கு ஒரு முழு நிதியாண்டின் லாபத்தில் அதிகரிப்பு இருந்தால், அந்த லாபத்தின் மீது 0.35% கமிஷன் பெற தகுதி உண்டு.
ஆனால், 2024 ஆம் நிதியாண்டில் விப்ரோ நிறுவனத்தின் லாபம் குறைந்திருப்பதால், ரிஷாத் பிரேம்ஜி அவர்களுக்கு எந்த கமிஷனும் வழங்கப்படவில்லை என்று நிறுவனத்தின் 20-F படிவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ரிஷாத் பிரேம்ஜி அவர்களுக்கு எந்த ஸ்டாக் ஆப்ஷன்களும் (stock options) வழங்கப்படவில்லை. 46 வயதான ரிஷாத் பிரேம்ஜி, 2019 ஆம் ஆண்டு விப்ரோ நிறுவனத்தின் நிர்வாக தலைவராக ஐந்து ஆண்டுகளுக்கு பதவியேற்றார். தற்போது, அவரது பதவிக்காலம் 2029 ஆம் ஆண்டு ஜூலை 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
விப்ரோ நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநரான தியர்ரி டெலபோர்டே 2024 ஆம் நிதியாண்டில் இவரது சம்பளம் 3.26% அதிகரித்துள்ளது. இதன் மூலம், ஐடி துறையில் அதிக சம்பளம் பெறும் தலைமை செயல் அதிகாரியாக அவர் உருவாகியுள்ளார்.
2024 நிதியாண்டில், தியரி டெலபோர்ட்டே-வின் மொத்த சம்பளம் $20.11 மில்லியன் (ரூ.166.5 கோடி சுமார்) ஆகும். இதில், அடிப்படை சம்பளமாக $3.9 மில்லியன், வேரியபிள் பே $5.06 மில்லியன், நீண்ட கால சம்பள திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பலன்கள் $4.32 மில்லியன் மற்றும் பிற சலுகைகள் $6.84 மில்லியன் ஆகும். கடந்த 2023 நிதியாண்டில், தியரி டெலபோர்ட்டின் மொத்த சம்பளம் $10 மில்லியன் ஆக இருந்தது.
தியரி டெலபோர்ட்டே இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பதவி விலகிய நிலையில் ரூ.92.1 கோடி (சுமார் $11 மில்லியன்) என்ற மிகப்பெரிய separation payment வழங்கப்பட்டுள்ளது. விப்ரோ நிறுவனத்தை விட்டு வெளியேறும் போது, கடைசியாக அமலில் இருந்த 12 மாத சம்பளத்தை பிரிவு ஊதியமாக வழங்குவது கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!



Click it and Unblock the Notifications