இந்தியாவில் இருக்கும் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் புதிய வர்த்தகத்தைப் பெற முடியாமல் மாட்டிக்கொண்டு இருக்கும் வேளையில் சக போட்டி நிறுவனங்களில் இருந்து உயர் அதிகாரிகளை ஈர்க்கும் படலம் கடந்த ஒரு வருடமாக நடந்து வந்த நிலையில் தற்போது இதன் வாயிலாக ஒரு புதிய பிரச்சனை விப்ரோ - காக்னிசென்ட் மத்தியில் வெடித்துள்ளது.
இந்தியாவின் 4வது பெரிய ஐடி சேவை நிறுவனமான விப்ரோ, முகமது ஹக் என்ற முன்னாள் உயர் அதிகாரி தங்களுடைய non-compete clause ஒப்பந்தத்தை மீறி போட்டி நிறுவனமான காக்னிசென்ட் நிறுவனத்தில் ஆகஸ்ட் மாதம் சேர்ந்துள்ளார் என வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கின் மூலம் காக்னிசென்ட் முக்கியமான அதிகாரியை இழப்பது மட்டும் அல்லாமல் அடுத்தடுத்து பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது. உண்மையில் என்ன பிரச்சனை.
முகமது ஹக் இந்த வருடம் ஜூன் மாதம் விப்ரோ நிறுவன பணியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி காக்னிசென்ட் நிறுவன பணியில் சேர்ந்தார். இதில் என்ன பிரச்சனை என்று பல ஐடி ஊழியர்களுக்கு தோன்றலாம் ஆனால் ஏற்கனவே குறிப்பிட்டது போல முகமது ஹக் கையெழுத்திட்டு உள்ள non-compete clause ஒப்பந்தம் மிகவும் முக்கியமானதாக உள்ளது.
விப்ரோ நிறுவனத்தில் முகமது ஹக் அமெரிக்க ஊழியராகவும், உயர் துணைத் தலைவர் (SVP) மற்றும் லோகலைசேஷன் பிரிவின் தலைவராகவும் பணியாற்றினார். இவர் பணியாற்றும் நேரத்தில் விப்ரோ நிர்வாகம், தன் நிறுவனத்தை விட்டு வெளியேறிய பின்பு காக்னிசென்ட் உட்படச் சில குறிப்பிட்ட நிறுவனத்தில் 12 மாதம் பணியாற்றக் கூடாது என்ற கண்டிஷன் உடன் non-compete clause ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளார்.
ஆனால் முகமது ஹக் விப்ரோ நிறுவனத்தின் ஒப்பந்தத்தை மீறி ஆகஸ்ட் 1 ஆம் தேதி காக்னிசென்ட் நிறுவனத்தில் சேர்ந்துள்ளார். இதேபோல் தான் ராஜினாமா செய்யும் போது எந்த நிறுவனத்தில் சேரப்போகிறார் என்பதைத் திட்டமிட்டு முகமது ஹக் மறைத்துள்ளார்.
இவை அனைத்தையும் முன்வைத்துத் தான் விப்ரோ தற்போது முகமது ஹக் மீது அமெரிக்காவில் வழக்குத் தொடுத்துள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் முகமது ஹக் மூலம் விப்ரோ நிறுவனத்தின் வர்த்தக இழப்பின் காக்னிசென்ட் ஆதாயம் அடைந்தால் இதுவும் பெரிய பிரச்சனையாக இருக்கும்.

மேலும் முகமது ஹக் விப்ரோ நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்யும் முன்பு, ஜூன் 20 ஆம் தேதி காலகட்டத்தில் இவரது பர்சனல் ஈமெயில் ஐடிக்கு விப்ரோ நிறுவனத்தின் 7 முக்கிய ஆவணங்களை அனுப்பியுள்ளார். இதை ஜூன் 22 ஆம் தேதி விப்ரோ ஐடி நிறுவனம் கண்டுப்படித்த நிலையில் ஜூன் மாதம் விப்ரோ நிறுவனத்தை விட்டு வெளியேறினார்.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் காக்னிசென்ட், விப்ரோ நிறுவனத்துடன் டிஜிட்டல் ஹெல்த்கேர் சர்வீசஸ் பிரிவில் நேரடியாகப் போட்டிப்போட்டு வரும் வேளையில், முகமது ஹக் விப்ரோ நிறுவனத்தில் பல வருடமாக இத்துறையில் பணியாற்றியவர்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications