ஐடி ஊழியர்களுக்கு இது போறாத காலம் எனலாம். ஏனெனில் மைக்ரோசாப்ட் தொடங்கி விப்ரோ வரையிலான பல முன்னணி ஐடி நிறுவனங்களும் பெரியளவில் பணி நீக்க நடவடிக்கையினை எடுத்து வருகின்றன.
குறிப்பாக இந்தியாவின் டாப் 5 ஐடி நிறுவனங்களில் விப்ரோவும் அடங்கும். விப்ரோ நிறுவனம் சில நூறு பிரெஷ்ஷர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும் நிறுவனம் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடவில்லை.
செயல்திறன் அடிப்படையில் பணி நீக்கம்
விப்ரோவில் செய்யப்பட்டுள்ள இந்த பணி நீக்கமானது செயல் திறன் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகின்றது. சில தினங்களுக்கு முன்பு தான் விப்ரோ நிறுவனம் 8,000 பேரை கேம்பஸ் இண்டர்வியூ மூலமாக பணியமர்த்த போவதாக அறிவித்தது.
800 பேர் நீக்கமா?
800 பணியாளர்கள் பல கட்ட சோதனைகளுக்கு பிறகு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சோதனையில் ஊழியர்கள் சரியாக செயல்படவில்லை என்றும், அவர்களின் செயல்திறன் என்பது மோசமாக இருந்ததாகவும் கூறப்படுகின்றது. இதனால் ஊழியர்களை நிறுவனத்தை விட்டு வெளியேறும் படி கேட்கப்பட்டதாகவும் தெரிகின்றது.
ரூ.75000 தள்ளுபடி
தகவல்கள் படி பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு நிறுவனம் அனுப்பிய பணி நீக்க கடிதத்தில், ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க நிறுவனம் செலவிட்ட 75,000 ரூபாயினை அளிக்க வேண்டும். ஆனால் நிறுவனம் அதனை தள்ளுபடி செய்கிறது என்பதை நாங்கள் உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறோம் என்று பணி நீக்க கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தாமதமாக சேர்ந்தேன்
இது குறித்து பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர் ஒருவர், கடந்த ஜனவரி 2022ல் எனக்கு விப்ரோவில் பணிக்கான ஆஃபர் கிடைத்தது. பல மாதங்கள் ஆகியும் பணியில் சேர முடியாமல் இருந்து வந்த நான், சமீபத்தில் தான் பணியில் சேர்ந்தேன். ஆனால் தற்போது சோதனை என காரணம் கூறி என்னை பணியில் இருந்து நீக்கி விட்டனர் என கூறியுள்ளார்.
இது வசதியான காரணம்
இதே BT-க்கு மற்றொரு நபர் அளித்த பேட்டியில், ஊழியர்களை பணி நீக்கம் செய்ய, அவர்களுக்கு செய்ய இது வசதியான காரணமாக போய்விட்டது என தெரிவித்துள்ளார்.
எனினும் விப்ரோ நிறுவனம் இது குறித்த எந்தவிதமாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.
நிகரலாபம்
விப்ரோ நிறுவனம் கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் 3052.90 கோடி ரூபாய் லாபத்தினை பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டில் 2,969 கோடி ரூபாயாக இருந்தது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் கடந்த டிசம்பர் காலாண்டில் 2.8% அதிகரித்துள்ளது.
நிலையான கரன்சியான கரன்சி மூலம் 11.5 - 12% வளர்ச்சியினை கண்டுள்ளது. எனினும் இது மார்ச் காலாண்டில் குறையலாம் என்றும் எதிர்பார்கக்ப்படுகிறது.
விரைவில் அப்டேட் வரலாம்
விப்ரோ நிறுவனத்தின் இந்த பணி நீக்க நடவடிக்கையானது, சில தினங்களுக்கு முன்பு தான் நிறுவனம் பணியமர்த்தலை பற்றி அறிவித்த நிலையில் வந்துள்ளது. இது மிகப்பெரிய குழப்பத்தினையும் கேள்வியை எழுப்பியுள்ளது. எப்படியிருப்பினும் இந்த பணியமர்த்தல் குறித்தான அறிவிப்பினை விப்ரோ அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் விரைவில் வெளியிடலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications