சமையல் எண்ணெய் தயாரித்த விப்ரோ இப்போ ஐடி சாம்ராஜ்ஜியம்.. அசிம் பிரேம்ஜி-யின் விடாமுயற்சி..!

விப்ரோ என்று சொன்னால் உடனடியாக ஐடி நிறுவனம் என்று நம்மில் பலருக்கும் உடனடியாக ஞாபகத்துக்கு வரும். ஆனால் விப்ரோ என்றால் புதிய முயற்சி, வளர்ச்சி, அதிசயத்தக்க மாற்றம் என்றால் அது மிகையாகாது. சாதாரணமாக சமையல் எண்ணெய் உற்பத்தியாளராக இருந்த ஒரு குடும்பம் இன்றைக்கு உலகமே வியந்து பார்க்கும் உலக மகா பன்னாட்டு ஐடி ஜாம்பவனாக உயர்ந்து நிற்கிறது. அதுதான் விப்ரோ.

இது ஒரு சிறந்த தொலைநோக்குச் சிந்தனை மற்றும் மாறும் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்தல் போன்ற காரணங்களால் மட்டுமே சாத்தியமாகும். சுதந்திரத்துக்கு முன்பு செய்துவந்த சமையல் எண்ணெய் உற்பத்தியில் இருந்து இப்போது விப்ரோ தலைவர் அசிம் பிரேம்ஜியின் நிலை எங்கிருக்கிறது என்பதை இங்கு விரிவாகப் பார்க்கலாம்.

சமையல் எண்ணெய் தயாரித்த விப்ரோ இப்போ ஐடி சாம்ராஜ்ஜியம்.. அசிம் பிரேம்ஜி-யின் விடாமுயற்சி..!

முகமது உசைன் ஹாஷம் பிரேம்ஜியால் தனது 21 வயதில் தொடங்கப்பட்டது வெஸ்டர்ன் இந்தியா வெஜிடபிள் புராடக்ட்ஸ் நிறுவனம். அதுவே இப்போது விப்ரோ. ஹாஷம் பிரேம்ஜியின் தந்தை ஒரு தானிய வியாபாரி. இதை பம்பாயில் ஒரு உற்பத்தி நிறுவனமாக அவர் மாற்றினார்.

முகமது உசைனின் மனைவி டாக்டர் குல்பானு பிரேம்ஜி, சவால்களை எதிர்கொள்வதற்கு எப்போதும் சளைத்ததில்லை. வெஸ்டர்ன் இந்தியா வெஜிடபிள் புராடக்ட்ஸ் நிறுவனத் தலவைராக குல்பானு பொறுப்பேற்றார். இதைத் தொடர்ந்து பம்பாயில் குழந்தைகளுக்கான ஆர்த்தோபீடிக் மருத்துவமனையை தொடங்கினார். பின்னர் அங்கு ஒரு செரிபிரல் பால்ஸி யூனிட்டை அமைத்தார்.

வெளிநாட்டில் படித்துக் கொண்டிருந்த முகமது உசைன் பிரேம்ஜியின் மகன் அசிம் பிரேம்ஜி கடந்த 1966ஆம் ஆண்டு இந்தியாவுக்குத் திரும்பினார். அவரிடம் நிறுவனத்தை கவனிக்கும் ஒட்டுமொத்தப் பொறுப்பும் வழங்கப்பட்டது.

ஆனால் அசிம் பிரேம்ஜியோ திடமான மனதும் தொலைநோக்குப் பார்வையும் கொண்டவராக விளங்கினார். வெஜிடபிள் ஆயில் ஆலையை முற்றிலும் மாற்றி பல்வேறு முனைகளில் வளர்ச்சியை நோக்கித் திருப்பினர் அசிம் பிரேம்ஜி.

அந்த நிறுவனத்தை அவர் விப்ரோ என பெயரிட்டு பதிவு செய்தார். மூலப்பொருட்கள் சார்ந்த தொழிலில் இருந்து மாடர்ன் யுகத்துக்கான சாப்ட்வேர் சேவைகள் மற்றும் இன்பர்மேஷன் டெக்னாலஜி போன்ற துறையில் கவனத்தைத் திருப்பினார்.

1989 ஆம் ஆண்டில் விப்ரோ கம்ப்யூட்டர் சிஸ்டமில் பல்முனை தயாரிப்பாளராக மாறி கன்ஸ்யூமர் புராடக்ட் மற்றும் இண்டஸ்ட்ரியல் எக்யூப்மென்ட்களைத் தயாரிக்கத் தொடங்கியது.

மாற்றம் ஒன்றே மாறாதது என்பதில் அசிம் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். புதிய திட்டங்கள், மாற்றங்களுக்கு ஏற்ப மாறுதல் என்பதுதான் மார்க்கெட்டை பிடிக்கும் ஒரே ஆயுதம் என்பதை அவர் புரிந்து வைத்திருந்தார். சரியான தருணத்தில் தனது வழிகாட்டுதல் மற்றும் செயல்பாடுகள் மூலம் நிறுவனத்தை ரேஸில் தீவிரமாக இயக்கினார்.

1990 ஆம் ஆண்டு முடிவில் உலகளவில் டெக்னாலஜி மார்க்கெட் வளர்ச்சி அடைந்திருந்தது. ஐடி சேவையில் விப்ரோவுக்கு புதிய முயற்சிகள் மற்றும் மார்க்கெட்டை அசிம் உருவாக்கத் தொடங்கினார். விப்ரோ நிறுவனத்தை சிலிக்கான் பள்ளத்தாக்கான பெங்களூருக்கு மாற்றினார். மார்க்கெட், புதிய நுணுக்கங்கள், ஸ்டார்ட் அப்கள், வளர்ச்சி இந்த சிலிக்கான் பள்ளத்தாக்கில் தான் கொட்டிக் கிடந்தன.

2000 ஆம் ஆண்டில் விப்ரோ ஒரு பில்லியன் டாலர் கம்பெனியாக உருவெடுத்தது. இந்தியப் பங்குச் சந்தையிலும் நியூயார்க் பங்குச் சந்தையிலும் பட்டியலிடப்பட்டது. 2019 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் தேதியுடன் விப்ரோ லிமிடெட் நிறுவனத்தின் செயல்தலைவர் பதவியில் இருந்து பிரேம்ஜி ஓய்வு பெற்றார்.

1966இல் இருந்து விப்ரோவை முன்னடத்தியதால் இப்போது மிகப்பெரிய சக்தியாக எனது வாழ்க்கையில் நிறைந்துள்ளது. இது ஒரு அசாதாரணமான பயணமாகும். சிறியதொரு வெஜிடபிள் ஆயில் கம்பெனி என்ற நிலையில் இருந்து பல்முனை உலக பிசினஸ்ஸாக நாங்கள் இப்போது உள்ளோம்.

தீவிரமான பங்கெடுப்பு மற்றும் ஊழியர்களின் கடும் உழைப்பினால் நிறுவனம் இன்றைக்கு இந்தளவுக்கு உருவெடுத்துள்ளது. என்று தனது கடைசி கடிதத்தில் பிரேம்ஜி குறிப்பிட்டுள்ளார்.
2019 ஆம் ஆண்டு ரிஷாத், விப்ரோ நிறுவனத் தலைவராக அசிம் பிரேம்ஜிக்குப் பின்னர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+