இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான விப்ரோ மார்ச் காலாண்டு முடிவில், முதலீட்டாளர்கள் எதிர்பார்த்த லாபம், வருவாய் அளவீட்டை பெற முடியவில்லை. இதனால் விப்ரோ பங்குகள் சரிந்தது மட்டும் அல்லாமல் சந்தை மதிப்பீட்டிலும் அதிகப்படியான பாதிப்பை எதிர்கொண்டது, இதை சரி செய்யும் விதமாக பல்வேறு மறுசீரமைப்பு பணிகள் விப்ரோ நிறுவனத்தில் நடந்து வருகிறது.
இதில் மிகவும் முக்கியமாக விப்ரோ நிறுவனத்தில் அரசு சேவைகளுக்கு என தனியாக இயங்கி வந்த Indian state-run enterprises (ISRE) துறையை பொது ஐடி சேவை துறையின் கீழ் இணைத்துள்ளது. இந்த முடிவு எடுக்க முக்கியமான காரணம் ISRE துறை 2022-23 ஆம் நிதியாண்டில் சுமார் 20.18 சதவீத வருமான இழப்பை எதிர்கொண்டது, இதனால் தனி பிரிவாக இயங்கி வந்த ISRE துறையை பொது ஐடி சேவை பிரிவின் கீழ் இணைக்கப்பட்டு உள்ளது.

விப்ரோ நிறுவனம் ஐடி சேவைகள், ஐடி ப்ராடெக்ஸ், ISRE என 3 பிரிவுகளில் இயங்கி வருகிறது. இந்த நிலையில் ISRE துறையில் அரசு சார்ந்த சேவைகளில் ஓவர்டியூ தொகையை வசூலிப்பதில் தாமதம் இருப்பதாலும், பெரிய அரசு திட்டங்களை கையாளுவதில் இருந்து விலகுவது மட்டும் அல்லாமல் சில சேவைகளை மூடவும் முடிவு செய்துள்ளது. இந்த முடிவுக்கு ஓவர்டியூ தொகையை வசூலிப்பதில் இருக்கும் தாமதம் மற்றும் வருவாய் பாதிப்பு ஆகியவற்றை காரணமாக காட்டுகிறது.
2022-23 ஆம் நிதியாண்டில் விப்ரோ நிறுவனத்தின் மொத்த வருவாயில் வெறும் 0.6 சதவீதம் மட்டுமே ISRE துறையின் பங்கீடாக உள்ளது. 2022 ஆம் நிதியாண்டில் இப்பிரிவின் பங்கீடு 0.9 சதவீதமாக இருந்தது. சொல்லப்போனால் விப்ரோ ஐடி ப்ராடெக்ஸ் பிரிவின் வருவாய் ISRE துறையை காட்டிலும் 2021 மற்றும் 2022 ஆம் நிதியாண்டில் தாண்டியது குறிப்பிடத்தக்கது. விப்ரோவை பொறுத்த வரையில் ஐடி சர்வீசஸ் துறை தான் 98 சதவீத வருவாயை வழங்குகிறது.
2019 ஆம் நிதியாண்டில் விப்ரோ அரசு சேவைகள் மீது அதிகப்படியான கவனம் செலுத்தி அதிக வர்த்தகம், வருமானத்தை பெற வேண்டும் என்ற இலக்குடன் ஐடி சரிவீசஸ் பிரிவில் இருந்து அரசு சேவைக்காக ISRE பிரிவை தனியாக பிரித்தது. தற்போது இந்த முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில் மீண்டும் ஐடி சர்வீசஸ் பிரிவுடனே ISRE துறையை சேர்கிறது.
விப்ரோ ISRE துறையை ஐடி சர்வீசஸ் உடன் சேர்த்துள்ளதால் இப்பிரிவில் பணியாற்றிய ஊழியர்களுக்கு எவ்விதமான பிரச்சனையும் இருக்காது. இதேவேளையில் சில அரசு திட்டங்களில் இருந்து விப்ரோ வெளியேற திட்டமிட்டு இருந்தாலும், இப்பிரிவு ஊழியர்கள் பிற ஐடி சர்வீசஸ் துறைக்கு மாற்றப்படலாம், இதனால் பணிநீக்கத்திற்கு வாய்ப்புகள் குறைவு தான்.

சமீபத்தில் டிசிஎஸ் மத்திய அரசிடம் இருந்து 15000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை BSNL நிறுவனத்திற்காக பெற்றது. மேலும் விப்ரோ நிறுவனம் அமெரிக்காவில் உள்ள செக்யூரிட்டிஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷனுக்கு சமீபத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் ரிஷாத் பிரேம்ஜி, 2023 நிதியாண்டுக்கான தனது சம்பளத்தில் தானாக முன்வந்து 50 சதவீதம் குறைத்துள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
2023 நிதியாண்டுக்கு ரிஷாத் ப்ரேம்ஜி-யின் மொத்த வருடாந்திர சம்பளமாக 951,353 டாலர் பெற உள்ளார். இது 2022 ஆம் ஆண்டு ரிஷாத் ப்ரேம்ஜி கிட்டத்தட்ட 1,819,022 டாலர் சம்பளமாக பெற்ற நிலையில் தற்போது வெறும் 50 சதவீத தொகையை மட்டுமே பெறுகிறார்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications