விப்ரோ கொடுக்க போகும் சர்பிரைஸ்.. டிசம்பரில் 1.85 லட்சம் பேருக்கு அதிர்ஷ்டம் தான்.. !

நாட்டில் நிலவி வரும் நெருக்கடியான நிலையில், இனி இந்தியர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும், வேலை கிடைக்குமா? இருக்கும் வேலை நிலைக்குமா? இப்படி பல கேள்விகலை உருவாக்கியுள்ளது இந்த கொரோனா.

சொல்லப்போனால் இன்றைய இளைய தலைமுறையினர் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று வேலையின்மை தான்.

அப்படியே வேலை கிடைத்தாலும், படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்குமா? சம்பளம் எதிர்பார்த்த அளவு இருக்குமா? என்பது தான். ஆனால் இந்த நெருக்கடியான காலகட்டத்திலும் கூட, ஊதிய உயர்வு வழங்க உள்ளதாக ஒரு முன்னணி ஐடி நிறுவனம் அறிவித்துள்ளது. அது எந்த நிறுவனம்,வாருங்கள் பார்க்கலாம்.

செயல்திறன் உடைய ஊழியர்களுக்கு பதவி உயர்வு

செயல்திறன் உடைய ஊழியர்களுக்கு பதவி உயர்வு

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ இந்த ஆண்டு டிசம்பரில், அதன் உயர் செயல்திறன் கொண்ட ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் என்று தெரிவித்துள்ளது. மேலும் இந்த விப்ரோவின் இந்த நடவடிக்கையானது கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் வணிக தொடர்ச்சியினை பராமரிப்பதற்காக, ஊழியர்களுக்கு வெகுமதி அளிப்பதற்காக எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.

பி3 ஊழியர்களுக்கு புரோமோஷன்

பி3 ஊழியர்களுக்கு புரோமோஷன்

இந்த முன்னணி சாப்ட்வேர் நிறுவனம், டிசம்பர் 1, 2020 முதல் பி3 ஊழியர்களுக்கு புரோமோஷன் கொடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. நிறுவனம் பி3 வரையிலான 80% பணியாளர்களைக் கொண்டுள்ளன. இந்த நிறுவனத்தின் மொத்தம் 1.8 லட்சம் ஊழியர்கள் எண்ணிக்கையில், 1.45 லட்சம் ஊழியர்கள் பி3 ஆகும்.

டீம் ரெயின்போ ஊழியர்களுக்கு கன்பர்மேஷன்

டீம் ரெயின்போ ஊழியர்களுக்கு கன்பர்மேஷன்

அதோடு டிசம்பர் 1 முதல் டீம் ரெயின்போ ஊழியர்களுக்கு கன்பர்மேஷன் உயர்வுகளையும் பெறுவார்கள். கொரோனா வைரஸ் காரணமாக இந்த ஆண்டு சம்பள உயர்வு கால வரையின்றி தாமதமாகும் என்று விப்ரோ முன்பு கூறியிருந்தார். எனினும் அனைத்து கேம்பஸ் வேலைகளையும் கெளரவிப்பதாக உறுதியளித்திருந்தது.

ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர வேண்டும்

ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர வேண்டும்

கொரோனா பரவல் காரணமாக விப்ரோவின் 98% ஊழியர்கள் தொடர்ந்து வீட்டிலிருந்து தொடர்ந்து பணியாற்றுகிறார்கள். இருப்பினும் இந்த நிறுவனத்தின் தலைவர் ரிஷாத் பிரேம்ஜி இது ஒரு நீண்டகால நிகழ்வாக பார்க்கவில்லை. ஆனால் அவர்கள் அலுவலகளுக்கு திரும்புவார்கள் என்றும் கூறியுள்ளார். மேலும் அவர்கள் அலுவலகங்களுக்கு திரும்புவது முக்கியம் என்றும் பிரேம்ஜி கூறியுள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+