இன்போசிஸ் பங்குகள் இன்றைய வர்த்தக முடிவில் 1.3 சதவீதம் வரையில் சரிந்தது, இது மட்டும் அல்லாமல் கடந்த 13 வர்த்தக நாளில் 12 நாட்களில் இன்போசிஸ் பங்குகள் சரிவை எட்டியுள்ளது. வியாழக்கிழமை வர்த்தகத்தில் இன்போசிஸ் பங்குகள் 1370.40 ரூபாய் வரையில் சரிந்து அதன் 52 வார சரிவான 1355.50 ரூபாய்க்கு வெறும் 1.5 சதவீத சரிவில் உள்ளது.
இதேவேளையில் விப்ரோ பங்குகள் இன்றைய வர்த்தக முடிவில் 1.34 சதவீதம் வரையில் சரிந்தது 360.50 ரூபாய் என்ற 52 வார விலையை பதிவு செய்துள்ளது. இதன் மூலம் விப்ரோ நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 1.98 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இதற்கிடையில் அக்சென்சர் நிறுவனம் 19000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இது ஐடி ஊழியர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்போசிஸ்
கடந்த ஒரு மாதத்தில் இன்போசிஸ் சுமார் 12 சதவீதம் சரிந்துள்ளது, சொல்லப்போனாள் அனைத்து முன்னணி இந்திய ஐடி சேவை நிறுவன பங்குகளும் சரிவை மட்டுமே சந்தித்துள்ளது. இந்த சரிவுக்கு மிகவும் முக்கியமான காரணம், இந்திய ஐடி நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் ரெசிஷன் மற்றும் தொடர் வட்டி விகித உயர்வால் ஐடி சேவை மீதான முதலீடுகளை குறைத்துள்ளனர்.
ஐடி நிறுவனங்கள்
அதிலும் முக்கியாக இந்திய ஐடி நிறுவனங்கள் அதிகளவிலான வர்த்தகத்தை கொண்டிருக்கும் வங்கி துறையில் தற்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தையில் பெரும் நெருக்கடிகள் உருவாகியுள்ளது. இதனால் அடுத்த சில காலாண்டுக்களுக்கு ஐடி சேவை துறை மோசமான நிலைக்கு தள்ளப்படலாம்.
டிஜிட்டல் மற்றும் கிளவுட் சேவை
இதுமட்டும் அல்லாமல் அனைத்து முன்னணி டிஜிட்டல் மற்றும் கிளவுட் சேவைகள் மீதான முதலீடுகளும் குறைக்கப்பட உள்ளது. இதனால் ஐடி சேவை நிறுவனங்கள் கட்டாயம் பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அக்சென்சர் நிறுவனம்
அக்சென்சர் நிறுவனம் தனது உலகளாவிய வர்த்தகத்தில் இருந்து சுமார் 19,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. ரெசிஷன் அச்சம் நிறைந்த காலக்கட்டத்தில் ஐடி சேவைகளுக்கு உலகளவிய நிறுவனங்கள் செலவுகளை குறைப்பதாக கருத்து நிலவி வரும் வேளையில் அக்சென்சர் நிறுவனத்தின் பணிநீக்க அறிவிப்புகள் இதை உறுதி செய்துள்ளது.
52 வார சரிவை
இன்றைய வர்த்தகத்தில் சுமார் 61 பங்குகள் 52 வார சரிவை எட்டியுள்ளது. இந்த 61 நிறுவனத்தில் விப்ரோ உட்பட வர்த்மன் ஹோல்டிங்ஸ், எம்பாசிஎஸ், ஷீலா ஃபோம், மோதிலால் ஓஸ்வால் பைனான்சியல் சர்வீசஸ், ஜூபிலண்ட் இங்க்ரீவியா, விப்ரோ, ஹியூபாக் கலரண்ட்ஸ் இந்தியா, நிப்பான் லைஃப் இந்தியா அசெட் மேனேஜ்மென்ட், அபெக்ஸ் ஃப்ரோசன் ஃபுட்ஸ், வொண்டர் எலக்ட்ரிக்கல்ஸ், எஸ்இஎல் மேனுஃபேக்ச்சரிங் கம்பெனி, போதார் ட்ரூஸ்சிங் ஏஜிபிட், டெவலப்மெண்ட் ட்ரான்சாக்ட் டெக்னாலஜிஸ், இன்டர்நேஷனல் கன்வேயர்கள், கெல்டன் டெக் சொல்யூஷன்ஸ், ஷா அலாய்ஸ், ஈஸி ட்ரிப் பிளானர்ஸ், கிருதி நியூட்ரியண்ட்ஸ், மாலு பேப்பர் மில்ஸ், ஆஸ்ட்ரோன் பேப்பர் & போர்டு மில் ஆகியவை அடக்கம்.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!



Click it and Unblock the Notifications