இந்தியாவின் டாப் 5 ஐடி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ இன்றைய வர்த்தகத் துவக்கத்தில் ஒரு பங்கு விலை 545.70 ரூபாய் அளவிற்கு உயர்ந்த காரணத்தால் இந்நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு சுமார் 3 லட்சம் கோடி ரூபாயை தாண்டியது.

ஆனால் வர்த்தக முடிவில் 0.74 சதவீத சரிவுடன் முடிந்த காரணத்தால் விப்ரோ நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு என்பது 2.94 லட்சம் கோடி ரூபாயாகக் குறைந்தது.
விப்ரோ நிறுவன பங்கு உயர்வுக்கு மிக முக்கியக் காரணம், இந்நிறுவனம் Squadcast என்ற SaaS மென்பொருள் துறையில் இயங்கும் நிறுவனத்தில் வர்த்தகக் கூட்டணிக்காகச் சுமார் 1.2 மில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்தது.
இந்த முதலீடு மூலம் Squadcast நிறுவனத்தில் சுமார் 20 சதவீத பங்குகளை விப்ரோ கைப்பற்ற உள்ளதாக மும்பை பங்குச்சந்தையில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. மும்பை பங்குச்சந்தையில் சுமார் 13 நிறுவனங்கள் இதற்கு முன்பு 3 லட்சம் கோடி ரூபாய் எனச் சந்தை மதிப்பீட்டைத் தாண்டியுள்ளது.
இப்பட்டியலில் விப்ரோ 14வது நிறுவனமாக உருவெடுத்துள்ளது. விப்ரோ நிறுவனத்தின் புதிய சிஇஓ-வாக Thierry Delaporte பதவியேற்றிய பின்பு விப்ரோ நிர்வாகத்தில் பெறும் மாற்றம் செய்யப்பட்டது. குறிப்பாக 25 உயர் தலைவர்கள் இருந்த இடத்தில் வெறும் 4 தலைவர்கள் மட்டுமே இருக்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டது.
இந்த மாற்றம் விப்ரோ நிறுவன பங்கு வளர்ச்சியில் எதிரொலித்தது. கடந்த ஒரு வருடத்தில் விப்ரோ பங்குகள் 157 சதவீதமும், 2021ஆம் ஆண்டில் மட்டும் 40 சதவீதமும். கடந்த ஒரு மாதத்தில் 11.44 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது.
More From GoodReturns

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

LPG தட்டுப்பாடு.. அதானிக்கு அடித்த யோகம்.. 2 நாளில் கோடி கோடியாய் பண மழை..

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

ஏஐ தொழில்நுட்பத்தின் கோரமுகம்.. Adode சிஇஓ சாந்தனு நாராயண் வெளியேற்றம்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

ஈரான் போரில் பாகிஸ்தானுக்கு மறைமுக பங்கு: வெளிச்சத்திற்கு வந்தது பாகிஸ்தானின் இரட்டை வேடம்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications