இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனங்கள் அனைத்தும் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டு வரும் வேளையில் விப்ரோ ஒரு முக்கியமான பிரச்சனையை வேகமாக முடிக்க திட்டமிட்டு உள்ளது. விப்ரோ நிறுவனத்தின் வருவாய், வர்த்தகம் அனைத்தும் பாதிக்கப்பட்டு வரும் வேளையில் ஊழியர்களுக்கு வேலையை கொடுத்துவிட்டு நிறுவனத்தில் சேர்க்காமல் நிறுத்தி வைத்துள்ளது.
இந்த பிரச்சனை முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தி வரும் வேளையில், மார்ச் காலாண்டு முடிவுகள் வெளியாவதற்கு முன்பு இதற்கு தீர்வு காண முடிவு செய்துள்ளது விப்ரோ நிர்வாகம். விப்ரோ தற்போது பணிக்காக ஆஃபர் லெட்டரை கொடுத்துவிட்டு ஜாயினிங் லெட்டர் கொடுக்காமல் காத்திருக்க வைப்பது தான் பிரச்சனை. இதை சரி செய்ய ஒரு டெஸ்ட் வைக்க உள்ளது.

இப்படி ஆன்போர்டு செய்யாமல் காத்திருக்கும் பெரும்பாலானவர்கள் பிரஷ்ஷர்கள் தான், இதனால் இவர்களுக்கு தாங்க பெற்ற பயிற்சியில் டெஸ்ட் வைக்கப்பட்டு அதில் தேர்ச்சி அடையாத பட்சத்தில் ஆஃபர் லெட்டர் ரத்து செய்யும் முறையை கொண்டு வந்துள்ளதாக பிடி தெரிவித்துள்ளது. இதன் மூலம் விப்ரோ நிறுவனத்தில் சேர 15 மாதங்களாக காத்திருப்போரை இந்த தேர்வு மூலம் தீர்வு காண உள்ளது.
விப்ரோ பிப்ரவரி மாதம் சில பிரிவு பிரஷ்ஷர்களுக்கு அளிக்கப்பட்ட 6.5 லட்சம் ரூபாய் வரையிலான சம்பள அளவீட்டை 3.5 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. இது ஏற்கனவே பெரும் பிரச்சனையாக இருக்கும் வேளையில் தற்போது புதிய டெஸ்ட் கொண்டு வரப்பட்டு உள்ளது. இது விப்ரோ நிறுவனத்தில் சேர காத்திருப்பவர்கள் மத்தியில் மட்டும் அல்லாமல் புதிதாக சேர விரும்புவோருக்கு மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐடி ஊழியர் சங்கமான Nascent Information Technology Employees Senate (NITES) தலைவர் ஹர்ப்ரீத் சிங் சலுஜா, விப்ரோ எடுத்துள்ள இந்த முடிவுகள் "நெறிமுறையற்றது, நியாயமற்றது" என்று குறிப்பிட்டார். இதேபோன்ற முறையை சில மாதங்களுக்கு முன்பு LTI Mindtree அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications