இந்தியாவின் 4வது பெரிய ஐடி சேவை நிறுவனமான விப்ரோ மிகவும் மோசமான நிலைமையில் இருக்கிறது, கடந்த 5 வருடத்தில் ரிஷாத் பிரேம்ஜி கையில் நிர்வாகம் வந்ததில் இருந்து பல மாற்றங்கள் நடந்ததது. இதில் முக்கியமான மாற்றம் இந்திய ஐடி நிறுவனங்கள் மத்தியில் இல்லாத வகையில் வெளிநாட்டு நபரை சிஇஓ-வாக நியமித்தார் ரிஷாத்.
ஐரோப்பிய சந்தையில் விப்ரோ நிறுவனத்தின் வர்த்தகத்தை பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற மெகா திட்டத்திற்காக ரிஷாத் பிரேம்ஜி, தியரி டெலாபோர்டே அவர்களை இப்பதவியில் அமரவைத்தார். ஆனால் அதற்கான பலன் கிடைக்கவில்லை என்பது மட்டும் அல்லாமல் 3வது இடத்தில் இருந்து 4வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது விப்ரோ.

இந்த நிலையில் விப்ரோ நிறுவனத்தால் கடந்த மூன்று ஆண்டுகளில் ஒரு மெகா ஒப்பந்தத்தை பெற முடியாத மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது பெரும் வேதனையாக உள்ளது. விப்ரோ நிறுவனத்தின் பெரிய ஒப்பந்தங்களை ஈர்க்கும் பிரிவின் தலைவரான ஸ்டெபானி ட்ராட்மேன் தற்போது பதவி விலகியுள்ளார், இது முதலீட்டாளர்கள் மத்தியில் முக்கிய விவாதக பொருளாக மாறியுள்ளது.
ஐடி துறை மந்தமான வர்த்தகத்தை எதிர்கொள்வது உண்மை தான், ஆனால் விப்ரோ-வின் சக போட்டி நிறுவனங்கள் இதே 3 வருட காலத்தில் குறைந்தபட்சம் ஒன்பது பெரிய ஒப்பந்தங்கள், அதாவது 1 பில்லியன் டாலருக்கும் அதிக மதிப்புடைய ஒப்பந்தங்களை பெற்றுள்ளது.
ஜனவரி 2021 முதல் கடந்த வாரம் வரை, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஐந்து மெகா ஒப்பந்தங்களை வென்றுள்ளது. இதுவே இன்போசிஸ் மூன்று திட்டங்களை கைப்பற்றியுள்ளது, HCL டெக்னாலஜிஸ் லிமிடெட் 2 பில்லியன் டாலருக்கும் அதிக மதிப்புள்ள மிகப்பெரிய ஒப்பந்தங்களில் ஒன்றை வென்றது.
ஆனால் விப்ரோ ஒரு பெரிய ஒப்பந்தத்தை கூட வெல்ல முடியாமல் நிற்கிறது. விப்ரோ நிர்வாகம் ஸ்டெபானி ட்ராட்மேன்-ஐ அக்சென்சர் நிறுவனத்தில் இருந்து அழைத்து வந்து பிப்ரவரி 2021ல் நியமித்தது. 3வருடத்தில் ஒரு பெரிய ஒப்பந்தம் கூட பெறாத நிலையில் டிசம்பர் 31 ஆம் தேதி நிறுவனத்தை விட்டு வெளியேறுகிறார்.
மேலும் ஸ்டெபானி ட்ராட்மேன் தலைமை விகித்த பெரிய ஒப்பந்தங்களை ஈர்க்கும் பிரிவில் 12க்கும் அதிமான ஊழியர்கள் பணியாற்றும் வேளையில் இப்பிரிவு துறைவாரியான வர்த்தகத்தை ஈர்க்கும் பணியில் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இது ஒருபக்கம் இருக்க மறுபுறம் 10க்கும் அதிகமான மூத்த அதிகாரிகள் சிடிஎஸ், இன்போசிஸ் போன்ற சக போட்டி நிறுவனங்கள் ஈர்த்துள்ளது. ஸ்டெபானி ட்ராட்மேன் தொடர்ந்து Eddie Woods-ம் ராஜினாமா செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளதார்.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications