கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பார்கள். அப்படி தான் இன்றைய ஐடி பிரெஷ்ஷர்களுக்கும். ஏனெனில் வேலை கிடைத்தும் அலுவலகம் சென்று பணிபுரிய முடியாத சூழல் இருந்து வருகின்றது.
பிரபலமான ஐடி நிறுவனங்களில் வேலை கிடைத்தும் இணைய முடியவில்லையே. இனி இணைவோமா? என்ற சந்தேகமும் ஐடி ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஏனெனில் நாட்டின் முன்னணி நிறுவனங்களான இன்ஃபோசிஸ், கேப்ஜெமினி, டெக் மகேந்திரா மற்றும் பல முன்னணி ஐடி நிறுவனங்கள் கடந்த காலங்களில் பணிக்காக பிரெஷ்ஷர்களை தேர்வு செய்தன. பணி ஆர்டரை கொடுத்துள்ள நிறுவனங்கள் இன்று வரையில் பணிக்கு அழைக்கவில்லை.
பணிக்கு அழைக்காமல் தாமதம்
இது குறித்த சர்ச்சையானது ஏற்கனவே பலவும் நிலவி வருகின்றது. சில தினங்களுக்கு முன்பு இன்ஃபோசிஸ் நிறுவனம் 4 மாதங்களில் 4 வது முறையாக தேதியினை மாற்றியுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த பட்டியலில் இன்ஃபோசிஸ் உடன், கேப்ஜெமினி, டெக் மகேந்திரா மற்றும் பல ஐடி நிறுவனங்களிலும் ஆஃபர் லெட்டரை பெற்றுள்ளவர்களுக்கு, பணிக்கு அழைக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
பணியமர்த்தல் நடவடிக்கை
பொதுவாக பணியமர்த்தல் நடவடிக்கையின் போது இண்டர்வியூவில் தேர்வு செய்யப்பட்டு, அவர்களிக்கு ஆஃபர் லெட்டர் வழங்கப்படும். அதன் பின்னரே அலுவலகத்தில் இணையும்போது அவர்களுக்கு பணி நியமன ஆர்டர் வழங்கப்படும். அதில் ஊழியர்கள் இணையும் தேதியும் கொடுக்கப்படும்.
இன்ஃபோசிஸ் நிலவரம்
குறிப்பாக இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் ஆஃபர் லெட்டர் கொடுத்த ஆறு மாதமாக திரும்ப அழைக்காமல் காத்திருப்பதாக ஊழியர்கள் கூறுகின்றனர். ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் ஆஃபர் லெட்டருக்காக காத்திருக்கிறேன்.
டெக் மகேந்திரா
இதே டெக் மகேந்திராவின் சேர வேலையை விட்டுவிட்ட மற்றொரு நபர், நான் டெக் மகேந்திரா நிறுவனத்தில் ஆஃபர் லெட்டரை பெற்றுள்ளேன். அவர் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்ததாகவும், டெக் மகேந்திராவின் இருந்து பணி ஆர்டர் பெற்ற பிறகு அந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் இருந்து வெளியேறினேன். ஆனால் எனக்கு இதுவரையில் ஆஃபர் லெட்டரோ அல்லது போர்டிங் தேதியோ (BT தளத்தின் அடிப்படையில் எழுத்தப்பட்டது)கொடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
கேப்ஜெமினி-யின் நிலவரம்?
மற்றொரு பிரஷர் தன் பல கட்ட தேர்வுக்கு பிறகு பணி ஆர்டரை டெக் மகேந்திராவில் இருந்து மே மாதம் பெற்றுள்ளதாகவும், இதுவரையில் எந்த விதமான அப்டேட்டும் கொடுக்கப்படவில்லை என கூறியுள்ளார்.
இதே கேப்ஜெமினியில் ஜனவரி 24 அன்று ஆர்டரை பெற்றதாகவும், 10 மாதங்களுக்கு மேலாகியும் எந்த விதமான அப்டேட்டும் இதுவரையில் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். நிறுவனம் பொதுவாக அப்டேட்டுக்காக காத்திருங்கள் என கூறுவதாகவும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
விப்ரோ
பல பிரெஷ்ஷர்களும் இன்ஃபோசிஸ், விப்ரோ, கேப்ஜெமினி, டெக் மகேந்திரா, அசெஞ்சர், மைண்ட் ட்ரீ உள்ளிட்ட நிறுவனங்கள் பணி நியமன ஆர்டருக்காக பல மாதங்களாக காத்துக் கொண்டுள்ளனர்.
விப்ரோ நிறுவனத்திலும் இதே நிலை தான் எனலாம். அங்கு நிறுவனத்தில் இணைந்து பணிபுரிய எந்த தேதியும் அறிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இத்துறை சார்ந்த நிபுணர்கள் சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், பணியமர்த்தல் நிலை மெதுவான நிலை இருந்து வருகின்றது.


Click it and Unblock the Notifications