உலகம் முழுவதும் ஐடி மற்றும் டெக் நிறுவனங்கள் இக்கட்டான நிலையில் இருக்கும் வேளையில், இந்தியாவில் ஐடி நிறுவனங்கள் பிரஷ்ஷர்களின் கனவை உடைத்துள்ளது.
ஐடி நிறுவனத்தில் வேலை என்பது பலரின் கனவாக இருக்கும் வேளையில், பலருக்கு கிடைத்த வேலைவாய்ப்பு இல்லையென்றாகியுள்ளது. இதனால் பல மாணவர்களின் வாழ்க்கை தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
விப்ரோ, இன்போசிஸ், டெக் மஹிந்திரா
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களான விப்ரோ, இன்போசிஸ், டெக் மஹிந்திரா உட்பட அனைத்தும் அதிகப்படியான ப்ராஜெக்ட்கள் வரும் காரணத்தால் அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் மட்டும் அல்லாமல் பட்டப்படிப்பு முடித்த பிரஷ்ஷர்களையும் அதிகளவில் பணியில் சேர்த்தது.
பிரஷ்ஷர்கள்
ஆனால் பல்வேறு காரணத்திற்காக இந்தப் பிரஷ்ஷர்களை நிறுவன பணியில் சேர்க்காமலேயே வைத்திருந்தது, இதேபோன்ற பிரச்சனை சில வாரங்களுக்கு முன்பு அனுபவம் வாய்ந்த ஊழியர்களுக்கு நடந்த நிலையில் தற்போது பிரஷ்ஷர்களுக்கும் நடந்துள்ளது.
3-4 மாதம் வரை
விப்ரோ, இன்போசிஸ், டெக் மஹிந்திரா ஆகிய 3 நிறுவனங்கள் பிரஷ்ஷர்களுக்குப் பணி வழங்குவதாக ஆஃபர் லெட்டரை அளித்த நிலையில் 3-4 மாதம் வரையில் ஆன்போர்டிங் செய்ய முடியாமல் இருந்த நிலையில் தற்போது ஆஃபரை அதாவது அவர்களுக்குக் கொடுத்த வேலையை ரத்துச் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
ஆஃபர் லெட்டர்
இதுகுறித்து ஆய்வு செய்த போது 3-4 மாதங்களுக்கு முன்பு விப்ரோ, இன்போசிஸ், டெக் மஹிந்திரா நிறுவனத்தில் வேலைக்காக விண்ணப்பம் செய்த நிலையில் பல சுற்றுகளுக்கு நடந்த இண்டர்வியூவ்-க்கு பின்பு ஆஃபர் லெட்டர் வந்தது. இதைத் தொடர்ந்து ஆன்போர்டிங் பணிகள் துவங்குவதற்காகக் காத்திருந்த எங்களுக்கு அதிர்ச்சி மட்டுமே மிஞ்சியது எனத் தெரிவித்துள்ளனர்.
தகுதிகள் போதாது
இந்த நிலையில் ஆஃபர் லெட்டர் பெற்ற பல பட்டதாரிகளுக்கு அதாவது பிரஷ்ஷர்களுக்கு ஆஃபரை திரும்பப் பெறுவதாக லெட்டர் வந்துள்ளது. இதற்கு நிறுவனங்கள் தகுதிகள் போதாது, நிறுவன விதிமுறைக்கு இணங்காதது போன்ற காரணங்களைத் தெரிவித்துள்ளனர்.
ஐடி நிறுவனங்கள்
உலகளவில் ஐடி நிறுவனங்களுக்கான வர்த்தகம் மற்றும் வருவாய் பெரிய அளவில் பாதித்துள்ள நிலையில் கூகுள், பேஸ்புக் போன்ற பணம் பலம் கொண்ட நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வரும் நிலையில், இந்தியாவில் முன்னணி ஐடி நிறுவனங்கள் தேர்வு செய்தவர்களை நீக்கி வருகிறது.
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications