IT ஊழியர்களுக்கு இது இன்ப அதிர்ச்சி தான்.. விப்ரோ, இன்டெல், டெக் மகேந்திரா சொன்ன விஷயம் என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காலம் காலமாக நீடித்து வரும் சீன இந்தியா எல்லை பிரச்சனை போல, ஐடி துறையிலும் அவ்வப்போது பணி நீக்கம் என்னும் பிரச்சனை எட்டிப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது.

ஆனாலும் இதற்கு மாற்றாக பணியமர்த்தலும் சிறிது காலத்திலேயே நடக்கும்.

அது தான் தற்போது நடந்துள்ளது. அதிலும் நடப்பு ஆண்டில் புதிய பணியமர்த்தல் என்பது இல்லை என்று கூறின. ஏனெனில் நிறுவனங்கள் சரிந்து வரும் பொருளாதாரத்தினை சமாளிக்கவும், செலவினை குறைக்கவும் பல அதிரடியான நடவடிக்கைகளை கடந்த பல வாரங்களாக எடுத்து வருவதை பார்க்க முடிகிறது.

அதிரடி நடவடிக்கை

அதிரடி நடவடிக்கை

ஆனால் தற்போது பொருளாதாரத்தினை மீட்டெடுக்கவும், நிறுவனங்கள் பழைய நிலையை திரும்ப கொண்டு வரவும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. சில நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களை விரிவுபடுத்தி வருகின்றன. சில நிறுவனங்கள் பணியமர்த்தலை செய்து வருகின்றன. இன்னும் சில நிறுவனங்கள் குறிப்பிட்ட துறையினை தேர்தெடுத்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

ஊழியர்களுக்கு இது நல்ல விஷயம்

ஊழியர்களுக்கு இது நல்ல விஷயம்

கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்தாலும், அதிலிருந்து மீளவும், சரிந்து வரும் வருவாயினை திரும்ப அதிகரிக்கவும் இத்தகைய அதிரடி நடவடிக்கைகளை விப்ரோ, இன்டெல், டெக் மகேந்திரா உள்ளிட்ட பல நிறுவனங்கள் எடுத்து வருகின்றன. இது உண்மையில் ஐடி ஊழியர்களுக்கும், மற்ற சில ஊழியர்களுக்கும் நல்ல விஷயம் தான்.

வேலையின்மை அதிகரிப்பு

வேலையின்மை அதிகரிப்பு

ஐடி துறையில் உள்ள முன்னணி நிறுவனங்கள் சில தங்களது நிறுவனங்களில் புதிய பணியமர்த்தலை தொடங்கியுள்ளன. இந்தியாவினை பொறுத்த வரையில் கொரோனாவின் தாக்கத்தினை குறைக்க மார்ச் 24லிருந்து லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் வேலையின்மை விகிதம் 20 சதவீதம் உயர்ந்ததாக சி எம் ஐ இ அறிக்கை தெரிவித்துள்ளது.

சில நிறுவனங்கள் பணியமர்த்தல்

சில நிறுவனங்கள் பணியமர்த்தல்

நாட்டில் லாக்டவுனில் தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும் கூட, தற்போதும் கூட கொரோனாவின் தாக்கம் இருந்து கொண்டே தான் இருக்கிறது. சில நிறுவனங்கள் சம்பள குறைப்பு, பணி நீக்கம் உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. எனினும் மறுபுறம் சில மல்டி நேஷனல் நிறுவனங்கள் பணியமர்த்தலும் செய்து வருகின்றன.

டெக் மகேந்திராவில் என்ன வேலை?

டெக் மகேந்திராவில் என்ன வேலை?

முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனமான டெக் மகேந்திரா நிறுவனம் பெங்களுருவில் பணி வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இது டெலி கம்யூனிகேஷன் இன்ஜினியர் (Telecommunication engineer) வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இதற்கு தகுதி எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன்ஸ் பிரிவில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. எனினும் எத்தனை இடங்கள் உள்ளன என்பது குறிப்பிடப்படவில்லை.

இன்டெல் கார்ப்பரேஷன்

இன்டெல் கார்ப்பரேஷன்

இன்டெல் கார்ப்பரேஷன் நிறுவனமும் RF engineer என்ற இடத்திற்கு ஊழியர்கள் தேவை என்று கூறியுள்ளது. இன்டெல்லும் பெங்களுரிவில் தான் பணி இடம் என்று தெரிவித்துள்ளது. இதற்கு குறைந்தபட்சம் 8 ஆண்டுகள் அனுபவம் வேண்டும் என்றும் கூறியுள்ளது. இதற்கு தகுதி பிடெக் எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன்ஸ் பிரிவில் இருக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளது.

லார்சன் & டூப்ரோ

லார்சன் & டூப்ரோ

லார்சன் & டூப்ரோ நிறுவனம் Integration Engineer என்ற பதவிக்கு தேவை உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த பணியானது குர்கானில் உள்ளதாகவும் கூறியுள்ளது. இதற்கான அனுபவம் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வேண்டும் என்றும், ஆனால் இதற்கு தகுதி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

விப்ரோவின் பணி

விப்ரோவின் பணி

பெங்களுருவினை அடிப்படையாகக் கொண்ட விப்ரோ நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் பணியிடத்திற்கு ஆட்கள் தேவை என கூறியுள்ளது. இதற்கு குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் அனுபவம் தேவை என்றும், இது எம்டெக், பிடெக் அல்லது எம்சிஏ படித்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

ஏபிபி என்ன சலுகை

ஏபிபி என்ன சலுகை

பெங்களுருவினை அடிப்படையாகக் கொண்ட புராஜக்ட் இன்ஜினியர், இதற்கு குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் அனுபவம் தேவை என்றும் தெரிவித்துள்ளது. இது மெக்கானிக்கல் இன்ஜினியர் படித்திருக்க வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Wipro, Intel, tech Mahindra and other multinationals hiring engineers

Tech Mahindra, intel, wipro and other It companies hiring engineers
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X