இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான விப்ரோ தனது ஜூன் காலாண்டு முடிவில் வருடாந்திர அடிப்படையில் 12 சதவீத உயர்வில் சுமார் 2870 கோடி ரூபாய் லாபத்தையும், வருவாய் அளவு வருடாந்திர அடிப்படையில் 6 சதவீதம் உயர்ந்து 22,831 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரிய நம்பிக்கை கொடுக்காத நிலையில் தற்போது முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜூன் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட பின்பு விப்ரோ நிறுவனத்தின் சிஇஓ தியரி டெலாபோர்டே முன்னணி பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்துள்ளார். இந்த பேட்டியில் விப்ரோ நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்து, மீண்டும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு வரும் பணிகள் இன்னும் நடந்து வருகிறது. இந்த முயற்சியில் முக்கியமாக விப்ரோ செயற்கை நுண்ணறிவு துறையில் மிகப்பெரிய முதலீட்டை செய்ய உள்ளதாக தெரிவித்தார்.

விப்ரோ நிறுவனத்தின் சிஇஓ தியரி டெலாபோர்டே தலைமையிலான நிர்வாகம் அடுத்த 3 வருடத்தில் 1 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை AI துறையில் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் விப்ரோ நிறுவனத்தின் தற்போதைய வாடிக்கையாளர்களுக்கும், புதிய வாடிக்கையாளர்களுக்கும் AI துறை சார்ந்த சொல்யூஷன்ஸ், பிளாட்பார்ம், அசர்ட் மற்றும் பிற சேவைகளை வழங்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
இந்த 1 பில்லியன் டாலர் முதலீட்டில் சுமார் 750 மில்லியன் டாலர் அளவிலான முதலீட்டு தொகையை ஆர்கானிக் ஆக அதாவது ஊழியர்கள் திறன் மேம்படுத்துதல், AI துறைக்கான கட்டமைப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றுக்கு செலவு செய்யப்பட உள்ளது.
மீதமுள்ள 250 மில்லியன் டாலர் அதாவது மொத்த முதலீட்டில் சுமார் 25 சதவீத தொகையை நிறுவனங்களை கைப்பற்றுவதற்காக செலவிடப்பட உள்ளது. இந்த முதலீட்டை Wipro Ventures வாயிலாக செய்யப்பட உள்ளோம், விப்ரோவின் முதலீட்டு நிறுவனம் தான் இந்த விப்ரோ வென்சர்ஸ். இந்த முதலீட்டை சொந்தமாக முதலீடு செய்யப்பட உள்ளது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
விப்ரோ நிர்வாகம் ஊழியர்கள் செயல்திறனை மேம்படுத்துவதில் வியக்க வைக்கும் பணிகளை செய்துள்ளது. இதேபோல் நிறுவனம் சிறியதாக இருந்துக்கொண்டே எப்படி அனைத்து பணிகளையும் செய்ய முடியும் என்ற அடிப்படையை வலிமையாக்கியுள்ளோம். இப்பணிகளில் உருவாக்கப்படும் கூடுதல் வருமானத்தின் வாயிலாகவே அடுத்த 3 வருடத்தில் 1 பில்லியன் டாலர் அளவிலான தொகையை AI துறையில் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார் தியரி டெலாபோர்டே.
விப்ரோ நிறுவனத்தின் 8000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டின் வாயாலிகா ஏஐ துறையில் பணியாற்றும் வாய்ப்பு இந்திய ஐடி ஊழியர்களுக்கு எளிதாகவும் கூடுதலாகவும் கிடைக்கும். செயற்கை நுண்ணறிவு துறை தான் எதிர்காலம் என கூறப்படும் வேளையில் இத்தகைய முதலீடு பெரிய நன்மையை இந்திய ஐடி ஊழியர்களுக்கு கட்டாயம் ஏற்படுத்தும்.
சமீபத்தில் விப்ரோ தனது ஊழியர்களுக்கான சம்பள உயர்வை 3வது காலாண்டுக்கு ஒத்திவைத்துள்ளது, அதாவது செப்டம்பர் மாதம் கொடுக்கப்படும் சம்பள உயர்வு இந்த ஆண்டு அக்டோபர் - டிசம்பர் காலாண்டுக்கு ஒத்திவைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதோடு முதல் காலாண்டுக்கான வேரியபிள் பே 80 சதவீதம் அளிக்கப்படும், இது ஒவ்வொரு அணியின் செயல்திறன் அடிப்படையில் மாறுபடும் என தெரிவித்தார்.
கடந்த வாரம் இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ், தற்போது பணியாற்றி வரும் முக்கிய வாடிக்கையாளரிடம் இருந்தே செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆட்டோமேஷன் அடிப்படையிலான 2 பில்லியன் டாலர் மதிப்பிலான 5 வருட Modernization மற்றும் Maintenance சேவை திட்டத்தை பெற்றுள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications