இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ, இந்தியாவில் பெண்கள் பணிபுரிய சிறந்த இடமாக பார்க்கப்படுகிறது.
இது குறித்து கிரேட் பிளேஸ் டு ஓர்க் இந்தியா என்று நடத்தப்பட்ட ஆய்வில், இந்தியாவில் பெண்கள் பணி புரிய சிறந்த இடங்களில் விப்ரோ உள்ளது.
கிரேட் பிளேஸ் டு ஓர்க் என்பது ஒரு உலகளாவிய தளமாகும், இது மிகுந்த நம்பிக்கை, உயர் செயல்திறன் கலாச்சாரங்களை உருவாக்குதல் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்துகிறது.
பணி புரிய சிறந்த நிறுவனம்
இந்த ஆய்வானது 60 நாடுகள் மற்றும் 6 கண்டங்களில் உள்ள நிறுவனங்கள், இலாப நோக்கற்ற நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் உள்பட, 10,000 நிறுவனங்களிடம் இந்த ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வில் குறைந்தபட்சம் 10% பெண்கள், அவர்களில் 70% நேர் மறையான பாசிட்டிவ் கருத்துகளை பகிர்ந்துள்ள நிலையில், விப்ரோ இந்த சிறந்த பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
விப்ரோ பெருமிதம்
விப்ரோ நிறுவனம் பாலின சமத்துவம் மற்றும் சிறந்த பணி அனுபவம், அனைத்து நிலைகளிலும் சமமான பிரதி நிதித்துவம் போன்ற மற்ற பல அம்சங்களிலும் சிறந்து விளங்கி வருகிறது.
இந்த வளர்ச்சி குறித்து கருத்து தெரிவித்த விப்ரோவின் தலைமை கலாச்சார அதிகாரி சுனிதா ரெபேக்கா செரியன், எங்கள் பன்முகத்தன்மை வாய்ந்த பணியாளர்கள் குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். எங்கள் வலுவான ஒற்றுமை என்பதே எங்களின் வெற்றியின் மையமாக அமைகிறது.
சுதந்திரமாக பணிபுரியும் ஊழியர்கள்
2022ம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த பணியிடங்களில் பெண்களுக்கான அங்கீகாரம் பெறுவது, விப்ரோவின் உயர் செயல் திறன், பன்முகத்தன்மை கொண்ட கலாச்சாரத்திற்கு ஒரு சான்றாகும். எங்கள் ஊழியர்கள் சுதந்திரமாக பணிபுரிவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் எங்கள் சமூகங்களுடனான தொடர்புகளுடன் இருக்கிறோம்.
மற்ற இந்திய நிறுவனங்கள்
இந்தியாவில் விப்ரோ தவிர ஷிவ் நாடாரின் ஸ்கூல், டெலாய்ட் இந்தியா, சிஸ்கோ சிஸ்டம்ஸ், டாடா கம்யூனிகேஷன்ஸ், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட இந்தியாவை சேர்ந்த மற்ற நிறுவனங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
பாதுகாப்பானது தான்
பொதுவாக பணிபுரியும் ஊழியர்கள் பெரும்பாலும் தங்களது குடும்பத்தை அடுத்து, அதிகளவில் நிறுவனத்தில் தான் இருக்கின்றனர். அப்படி இருக்கும் சூழல் அவர்களுக்கு பாதுகாப்பானதா? சிறந்த ஒரு சூழலாக இருக்கிறதா? இதன் மூலம் மேற்கண்ட நிறுவனங்கள் அதிக வேலை வாய்ப்பினை உருவாக்குகின்றன. திறனை வளர்க்கின்றன. நிலவி வரும் நெருக்கடியான நிலையிலும் கூட முன்னேற்றத்திற்கு வழிவகுக்கின்றன.


Click it and Unblock the Notifications