விப்ரோ லைட்டிங் நிறுவனம், இத்தாலி பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ஆரா ஏர் நிறுவனம் உடன் அகில இந்திய அளவிலான பிரத்தியேக கூட்டாண்மையை அறிவித்துள்ளது.
இந்த கூட்டணி மூலம் விப்ரோ லைட்டிங், ஆரா ஏர் நிறுவனத்தின் அனைத்து விதமான பிரத்தியேக அணுகலையும் பெறும்.
இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக விப்ரோ அதன் போர்ட்போலியோவில், உட்புற காற்றின் தர மேலாண்மை வணிகத்தினை சேர்க்கும். இரு நிறுவனங்களும் இணைந்து இந்திய சந்தையில் தங்களது சேவையினை வழங்கும் என தெரிவித்துள்ளது.

புதிய சேவைகள் திட்டம்
உலகளாவிய தர நிலைகளுக்கு ஏற்பட காற்றின் தரத்தை மொபைல் ஆப் மூலம் கண்காணிக்கும் சேவையினை தொடங்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
விப்ரோவின் வணிக மற்றும் நிறுவன வணிகத்திற்கான துணைத் தலைவரும், வணிகத் தலைவருமான அனுஜ் திர், எங்கள் வணிகத்தினை பல துறைகளிலும் விரிவுபடுத்தும். வணிகத்தினை பன்முகப்படுத்தும்.

பல சேவைகள் விரிவாக்கம்
லைட்டிங் மற்றும் இருக்கைக்கு அப்பால் மற்ற துறைகளிலும் வளர்ச்சி காண நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆக மேற்கண்ட சேவைகள் தவிர ஆரா ஏரின் அனைத்து சேவைகளையும் பிரத்தியேக அணுகலுடன், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தேவையான சேவையை நாங்கள் செய்வோம்.

ஆரோக்கியத்தில் கவனம்
நாங்கள் தொழில்நுட்பம் மற்றும் நிபுணத்துவம் என்பதை ஆரா கொண்டு வரும் என நாங்கள் நம்புகிறோம். வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் எங்கள் வாடிக்கையாளர்கள், ஊழியர்களின் உடல் நலம் மற்றும் ஆரோக்கியத்தில் நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம். அதனை உருவாக்குவதற்கும், ஒரு நல்ல தீர்வை வழங்குவதற்கும் இந்த கூட்டணி உதவும் என்றும் திர் தெரிவித்துள்ளார்.

தேவை அதிகம்
இன்றைய காலகட்டத்தில் சிறந்த உட்புற காற்றின் தேவை என்பது உலகளவில் அதிகரித்து வருகின்றது. பெரும்பாலான மக்கள் தங்கள் பணியிடங்களில் அதிக நேரத்தினை செலவழிக்கின்றனர். சிறந்த வேலை சூழ்நிலைகளுக்கு ஏற்ப, சுத்தமான காற்றை சுவாப்பதும் அவசியமானதே. இன்றைய நவ நாகரீக காலகட்டத்தில் அவசியமான முதன்மை தேவையாக ஒன்றாகவும் இருக்கிறது.

ஆராவின் கருத்து
ஆக அதனை பூர்த்தி செய்ய விப்ரோ லைட்டிங் உடன் இணைந்து, வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப, இந்தியா முழுவதும் சுத்தமான காற்றை சுவாசிக்க தேவையான தயாரிப்புகளை நாங்கள் வழங்குவோம் என்றும் ஆரா தரப்பில் தெரிவித்துள்ளது.