இந்தியாவின் 4வது பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் விப்ரோ கடந்த 3 மாதங்களாகப் பல்வேறு சிக்கல்களில் மாட்டிக்கொண்டு வருகிறது.
முதலில் வேரியபிள் பே தொகையை மொத்தமாக ரத்து செய்தது, அதன் பின்பு மூன்லைட்டிங் பிரச்சனையால் 3000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது, சமீபத்தில் பிரஷ்ஷர்களுக்கு ஆஃபர் லெட்டரை கொடுத்துவிட்டு ஆன்போர்டிங் செய்ய முடியாமல் பணி ஆணையை ரத்து செய்தது என அடுத்தடுத்து பல பிரச்சனைகளில் மாட்டிக்கொண்டது.
இதற்கிடையில் விப்ரோ நிறுவனம் தனது காலாண்டு முடிவுகளை வெளியிடத் தயாராகி வரும் நிலையில் ஊழியர்களுக்கு முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
டிசிஎஸ் நிறுவனம்
சமீபத்தில் டிசிஎஸ் நிறுவனம் அனைத்து ஊழியர்களையும் அலுவலகத்திற்குக் கட்டாயம் வர வேண்டும் என அறிவித்திருந்தது நினைவிருக்கும். தற்போது விப்ரோவும் இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டு உள்ளதால் விப்ரோ ஊழியர்கள் சோகத்தின் உச்சத்தில் உள்ளனர்.
விப்ரோ
விப்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பில் வாரத்தில் 3 நாட்கள் அனைத்து ஊழியர்களும் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்று இந்திய அலுவலகத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் அறிவித்துள்ளது. மேலும் அக்டோபர் 10 ஆம்தேதி முதல் இந்தியாவில் இருக்கும் அனைத்து விப்ரோ அலுவலகங்களும் வாரத்தில் 4 நாட்கள் திறந்திருக்கும் என அறிவித்துள்ளது.
3 நாள் கட்டாயம்
அதாவது வாரத்தில் திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாடுகளில் விப்ரோ அலுவலகம் திறந்திருக்கும். புதன்கிழமை திறக்கப்படாது என விப்ரோ அனைத்து ஊழியர்களுக்கும் ஈமெயில் அனுப்பியுள்ளது. இதன் மூலம் வாரம் முழுவதும் வீட்டில் இருந்து வேலை செய்யப்படும் முறை முற்றிலுமாக நீக்கப்பட்டு உள்ளது.
ஐடி ஊழியர்கள்
இந்த அறிவிப்பு விப்ரோ நிறுவனங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல வருடங்களாக வீட்டிலேயே இருந்து பணியாற்றி வந்த ஊழியர்களுக்கு இந்த வாரத்தில் 3 நாள் அழைப்பு என்பது சுமையாக உள்ளது. பெரும்பாலான ஐடி ஊழியர்கள் சொந்த ஊரில் இருந்து நகரங்களுக்கு வந்திருந்திருந்தாலும் அலுவலகத்திற்கு வர மறுக்கின்றனர்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications