இந்தியாவின் 4வது பெரிய ஐடி சேவை நிறுவனமான விப்ரோ தனது சக நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ் போல் அனைத்து ஊழியர்களும் பதவி வித்தியாசம் இல்லாமல் வாரத்திற்கு 3 நாள் கட்டாயம் அலுவலகம் வர வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கியுள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் ஒட்டுமொத்த ஐடி ஊழியர்களும் லுங்கி, ஷார்ட்ஸ், நைட்டி, நைட் டிரெஸ் எல்லாம் தூக்கி போட்டுவிட்டு பார்மல் டிரஸ் வாங்க ஷாப்பிங் செல்ல துவங்கியுள்ளனர். அடுத்தடுத்து அனைத்து நிறுவனங்களும் வொர்க் இன் ஆஃபீஸ் முறையைக் கட்டாயமாக்கி வருவதால், இதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

விப்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பில் தீபாவளி பண்டிகை முடிந்து நவம்பர் 15 ஆம் தேதி முதல் அனைத்து ஊழியர்களும் ஹைப்ரிட் வொர்க் பாலிசி முறையை ஏற்று வாரத்திற்கு 3 நாள் கட்டாயம் அலுவலகம் வர வேண்டும் என்று அறிவித்துள்ளது. இதுகுறித்து நவம்பர் 6 ஆம் தேதி அனைத்து ஊழியர்களுக்கும் விப்ரோ நிர்வாகம் ஈமெயில் அனுப்பியுள்ளது.
சமீபத்தில் டிசிஎஸ் நிர்வாகம் அனைத்து அசோசியேட் ஊழியர்களையும் வாரத்தில் 5 நாளும் அலுவலகம் வர வேண்டும் என்ற கட்டுப்பாட்டை விதித்தது. இது மட்டும் அல்லாமல் டிசிஎஸ் நிர்வாகம் அனைத்து அசோசியேட் ஊழியர்களும் கட்டாயம் ஃபார்மல் டிரஸ் கோட்-ஐ தான் பயன்படுத்த வேண்டும் என்ற கூடுதல் கட்டுப்பாட்டையும் விதித்துள்ளது.
இதைத் தொடர்ந்து இன்போசிஸ் நிர்வாகம் பேன்ட் 5 மற்றும் 6 பிரிவில் இருக்கும் ஊழியர்கள் மாதத்தில் 10 நாளாவது அலுவலகம் வர வேண்டியதை கட்டாயமாக்கியுள்ளது, மேலும் ஆரம்பக்கட்ட மற்றும் நடுநிலை பதவிகளில் இருக்கும் ஊழியர்களுக்கு அணியின் தீர்மானம், அவர்களின் வாடிக்கையாளர் கட்டுப்பாடு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஊழியர்களை அலுவலகம் வரவழைத்துள்ளது.

நவம்பர் 15 ஆம் தேதி முதல் அனைத்து ஊழியர்களும் ஹைப்ரிட் வொர்க் பாலிசி முறையை ஏற்று வாரத்திற்கு 3 நாள் கட்டாயம் அலுவலகம் வருவது மூலம் டீம்வொர்க் மேம்படுவது மட்டும் அல்லாமல், சக ஊழியர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பை பெற முடியும். இது விப்ரோ ஊழியர்கள் மத்தியிலான பணி கலாச்சாரத்தை மேம்படுத்தும் என விப்ரோ தலைமை மனித வள பிரிவு அதிகாரி சௌரப் கோவில் ஊழியர்களுக்கு அனுப்பிய ஈமெயிலில் தெரிவித்துள்ளார்.
விப்ரோ ஜனவரி 7 முதல் வொர்க் ப்ரம் ஹோம் பாசிலியை படிப்படியாக நீக்கி வருவது மூலம், விதிமுறையை மதிக்காத ஊழியர்கள் கட்டாயம் கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications