பெங்களூருவை தளமாகக் கொண்டு உலகின் பெரும்பாலான நாடுகளில் இருக்கும் நிறுவனங்களுக்கு டெக் சேவை அளித்து வரும் இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான விப்ரோ, தனது ஐந்து துணை நிறுவனங்களை தாய் நிறுவனமான விப்ரோ லிமிடெட் உடன் இணைப்பதாக புதன்கிழமை அறிவித்தது.
விப்ரோ நிறுவனத்தின் சிஇஓ-வாக தியரி டெலாபோர்ட்டே தலைமையேற்றிய நாளில் இருந்து பல அதிரடி மாற்றங்கள் ஊழியர்கள் மத்தியிலும், நிர்வாகத்திலும் நடந்து வருகிறது. மே மாதத்தில் விப்ரோ நிறுவனத்தில் அரசு சேவைகளுக்கு என தனியாக இயங்கி வந்த Indian state-run enterprises (ISRE) துறையை பொது ஐடி சேவை துறையின் கீழ் இணைத்தது.

தியரி டெலாபோர்ட்டே தலைமையிலான நிர்வாகம் இந்த முடிவு எடுக்க முக்கியமான காரணம் ISRE துறை 2022-23 ஆம் நிதியாண்டில் சுமார் 20.18 சதவீத வருமான இழப்பை எதிர்கொண்டது, இதனால் தனி பிரிவாக இயங்கி வந்த ISRE துறையை பொது ஐடி சேவை பிரிவின் கீழ் இணைக்கப்பட்டு உள்ளது.
இதை தொடர்ந்து செப்டம்பர் காலாண்டு முடிவில் விப்ரோ எச்ஆர் சர்வீசஸ், விப்ரோ ஓவர்சீஸ் ஐடி சர்வீசஸ், விப்ரோ டெக்னாலஜி ப்ராடெக் சர்வீசஸ், விப்ரோ டிரேட்மார்க்ஸ் ஹோல்டிங் மற்றும் விப்ரோ விஎல்எஸ்ஐ டிசைன் சர்வீசஸ் ஆகியவற்றை தாய் நிறுவனமான விப்ரோ லிமிடெட் உடன் இணைக்கும் முடிவு புதன்கிழமை நடைபெற்ற நிர்வாக குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டு, செப்டம்பர் காலாண்டு முடிவில் தெரிவிக்கப்பட்டது.
விப்ரோ நிறுவனத்தின் இந்த ணைப்புத் திட்டத்திற்கு தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயத்தின் (NCLT) அனுமதி உட்பட சட்டப்பூர்வ மற்றும் ஒழுங்குமுறை ஒப்புதல் தேவைப்படும். இவை அனைத்தையும் பெற்ற பின்பு தான் ஒருங்கிணைக்கும் பணிகள் துவங்கும்.
விப்ரோ இந்த இணைப்பு முடிவின் பின்னால் நான்கு காரணங்களை மேற்கோள் காட்டியது - வணிக செயல்பாடுகளை ஒருங்கிணைத்தல், செயல்பாடுகளின் ஒருங்கிணைப்பை செயல்படுத்துதல், ஊழியர்கள் முதல் பல்வேறு செலவுகளை குறைத்தல், உகந்த சட்ட நிறுவன கட்டமைப்பை உறுதி செய்தல் ஆகியவைற்றை குறிப்பிட்டு உள்ளது,
விப்ரோ எச்ஆர் சர்வீசஸ், விப்ரோ ஓவர்சீஸ் ஐடி சர்வீசஸ், விப்ரோ டெக்னாலஜி ப்ராடெக் சர்வீசஸ், விப்ரோ டிரேட்மார்க்ஸ் ஹோல்டிங் மற்றும் விப்ரோ விஎல்எஸ்ஐ டிசைன் சர்வீசஸ் ஆகிய 5 கிளை நிறுவனங்களின் 100 சதவீத பங்குகளை விப்ரோ வைத்திருக்கும் காரணத்தால் இந்த இணைப்பு மூலம் புதிய பங்குகளின் வெளியீடு இருக்காது. எனவே பங்குதாரர் மத்தியில் எந்த மாற்றமும் இருக்காது.


Click it and Unblock the Notifications