ஒரே நேரத்தில் இரண்டு வேலை.. ஐடி நிறுவனங்கள் எப்படி கண்டுபிடிக்கிறது‌‌..? ஐடி ஊழியர்களே உஷார்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ சில வாரங்களுக்கு முன்பு மூன்லைட்டிங் பிரச்சனையை சுட்டி காட்டி 300 பேரை பணி நீக்கம் செய்தது. இது ஐடி ஊழியர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தினை ஏற்படுத்திய நிலையில் தற்போது பற்பல நிறுவனங்களும் மூன் லைட்டிங் குறித்து உன்னிப்பாக கவனிக்க தொடங்கியுள்ளன.

 

இது நியாயமான ஒன்றா? இது சரியான நடவடிக்கையா? விப்ரோ இப்படி ஒரு கடுமையான நடவடிக்கை எடுத்தது ஏன்?

தற்போது பற்பல ஐடி நிறுவனங்களும் இத்தகைய நடவடிக்கையை உன்னிப்பாக கவனித்து வருகின்றனவா? ஊழியர்கள் எப்படி எல்லாம் கண்கானிக்கப்படலாம்? வாருங்கள் பார்க்கலாம்.

இதுவும் ஒரு வழி

இதுவும் ஒரு வழி

ஐடி நிறுவனங்கள் எப்படி மூன்லைட்டிங் பிரச்சனையை கவனிக்கின்றன. விப்ரோ எப்படி இதனை கண்டுபிடித்தது. இது போன்று ஊழியர்களை கண்கானிப்பது சரியா? வாருங்கள் பார்க்கலாம்.

இது UAN மூலம் அணுகுவது சாத்தியமான வழிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஐடி நிறுவனங்கள் ஊழியர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களில் பணிபுரிகின்றனரா? என்பதை கவனிக்கின்றன. எனினும் இதனை தெரிந்து கொள்ள பல வழிகள் உள்ளன. அதில் ஒன்று UAN மூலம் தெரிந்து கொள்வது.

இதெல்லாம் கண்கானிக்கப்படுகிறதா?

இதெல்லாம் கண்கானிக்கப்படுகிறதா?

எனினும் ஊழியர்கள் முழு நேர ஊழியர்களாக இருந்தால் மட்டுமே UAN மூலம் கண்டுபிடிப்பது சாத்தியம்.

ஊழியர்கள் பயன்படுத்தும் லேப்டாப் மற்றும் ஸ்மார்ட்போன்களை கண்கானிப்பது மற்றொரு முக்கிய வழியாக பார்க்கப்படுகிறது. நீங்கள் நிறுவனத்தின் லேப்டாப்பினை பயன்படுத்தினால், அது சர்வரில் பதிவாகிறது. அதன் மூலம் நிறுவனம் உங்களை கண்கானிக்கிறது என்பதை மாறவாதீர்கள்.

இது சரியானதா?
 

இது சரியானதா?

இபிஎஃப் தளத்தில் இதுபோன்ற தரவுகள் இருந்தால் நிறுவனம் நடவடிக்கை எடுக்க உரிமை உண்டு. இதன் மூலம் நீங்கள் இருபுறங்களிலும் சலுகைகள் பெறுவதை தெரிந்து கொள்ள முடியும். இது ஏற்றுக் கொள்ள முடியாதது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இது ஒரு பெரிய விதிமீறலாக இருந்தாலும், இந்தியாவில் அந்தளவுக்கு கடுமை இல்லை. இது ஏற்றுக் கொள்ளப்படாத ஒன்றாக இருந்தாலும், இதனால் கடுமையான நடவடிக்கை என்பது பெரிதாக இல்லை.

விப்ரோ ஏன் இப்போது இப்படி நடவடிக்கை?

விப்ரோ ஏன் இப்போது இப்படி நடவடிக்கை?

எனினும் சர்வதேச அளவில் நிலவி வரும் அசாதாரணமான நிலைக்கு மத்தியில் விப்ரோவின் உற்பத்தி திறன் என்பது குறைந்திருக்கலாம். பெரும்பாலான நிறுவனங்கள் இரட்டை வேலை வாய்ப்பை வெளிப்படையான ரகசியமாக கருதினாலும், விப்ரோ நிறுவனத்தின் கடுமையான நடவடிக்கை பெரியளவில் சவாலான நிலையை சுட்டிக் காட்டுகின்றது. இது பெரியளவில் பிரச்சனையை எதிர்கொண்டிருக்கலாம்.

எச்சரிக்கையா?

எச்சரிக்கையா?

ஆக இதனை இனியேனும் தடுக்க நிறுவனம் இத்தகைய நடவடிக்கையினை எடுத்திருக்கலாம். மேலும் தற்போது ஊழியர்கள் ஹைபிரிட் மாடல், வீட்டில் இருந்து பணி புரிவதால் இந்த எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. ஆக நிறுவனங்கள் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. இதன் மூலம் மற்ற ஊழியர்களுக்கு எச்சரிக்கையாகவும் அனுப்பியிருக்கலாம்.

கொரோனாவுக்கு முன் பின்

கொரோனாவுக்கு முன் பின்

கொரோனாவுக்கு முன்பு இதனை குறைந்த அளவிலான ஊழியர்கள் செய்திருக்கலாம். எனினும் கொரோனாவுக்கு பின்னர் வீட்டில் இருந்து ஊழியர்கள் பணிபுரிவதால், இது அதிகரித்திருக்கலாம். இது கொரோனாவின் வருகைக்கு பிறகு வீட்டில் இருந்து பணி என்பது பரவலாக அதிகரித்து விட்டது. இதனால் மூன்லைட்டிங் குறித்தான அவ நம்பிக்கையானது நிறுவனங்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றது. இத்தகைய சூழலில் தான் நிறுவனங்கள் ஊழியர்களை நெருக்கமாக கண்கானித்து வருகின்றன.

ஐபிஎம்-மின் நிலைப்பாடு

ஐபிஎம்-மின் நிலைப்பாடு

விப்ரோவை போலவே ஐபிஎம், இன்ஃபோசிஸ், டெக் மகேந்திரா உள்ளிட்ட நிறுவனங்களும் மூன்லைட்டிங் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளன..

ஐபிஎம் நிறுவனம் ஒரு ஊழியர் நிறுவனத்தில் பணிபுரிய தொடங்கும்போது, ஊழியர்கள் ஒப்பந்தத்திலேயே, ஐபிஎம்- மில் மட்டுமே பணிபுரிய ஒப்புக் கொள்கின்றனர். ஆக இதுவே ஊழியர்கள் மூன்லைட்டிங் என்ற ஆப்சனை எதிர்கொள்ளும்போது பிரச்சனையை எதிர்கொள்ள வழிவகுக்கின்றன.

இன்ஃபோசிஸ்

இன்ஃபோசிஸ்

இன்ஃபோசிஸ் நிறுவனமும் இரட்டை வேலையை அனுமதிக்காது என்று கூறி வருகின்றது. அப்படி மீறினால் ஊழியர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறியது. இது பணி நீக்கம் செய்ய வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்காலம் எப்படி?

எதிர்காலம் எப்படி?

நாளுக்கு நாள் ஐடி துறையில் போட்டிகள் அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற செயல்கள், நிறுவனங்கள் மத்தியில் பெரும் அதிருப்தியினை ஏற்படுத்தி வருகின்றன. இது விதிமுறைகளை கடுமையாக்க வழிவகுத்துள்ளது.

எனினும் மூன்லைட்டிங் என்பது வெளிப்படையாக கையாளப்பட வேண்டும். இதனை நிறுவனமும் ஊழியர்களும் சரியாக கையாண்டால், அது இருவருக்குமே வெற்றியாக இருக்கும் என நாஸ்காம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு

பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு

ஊழியர்களிடம் மூன்லைட்டிங் குறித்தான வெளிப்படைத் தன்மை இல்லாத நிலையில், இது நிறுவனங்களின் நம்பிக்கையையும் தகர்க்கிறது. நீங்கள் முழு நேர பணியில் இருக்கும்போது இதனை பற்றி நிறுவனங்களுக்கு சொல்லாமல் இருக்கும் போது, நிறுவனங்களுக்கு சிக்கலை ஏற்படுத்துகின்றது. இது நிறுவனங்கள் நம்பிக்கையை இழக்க காரணமாக அமைகிறது. ஆக இருவர் தரப்பிலும் இது குறித்து விவாதிக்கப்பட வேண்டும். இதுவே இந்த பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வை கொடுக்கும் என நிபுணர்கள் நம்புகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

wipro moonlighting: how IT companies track cheater employees?

wipro moonlighting: how IT companies track cheater employees?/ஊழியர்களே உஷாரா இருங்க.. நிறுவனங்கள் மூன்லைட்டிங்கினை எப்படி கண்கானிக்கின்றன தெரியுமா?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X