ஐடி துறையின் முன்னணி நிறுவனமான விப்ரோ, அதன் மார்ச் காலாண்டு அறிக்கையினை வெளியிட்டுள்ளது. அதில் நிகரலாபம் கடந்த ஆண்டினை காட்டிலும் 27.78% அதிகரித்து, 2,972.3 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 2,326.1 கோடி ரூபாய் லாபத்தினை கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதே கடந்த டிசம்பர் காலாண்டில் 2968 கோடி ரூபாய் லாபத்தினையும் கண்டுள்ளது.
இதே வருவாய் கடந்த ஆண்டை காட்டிலும் 3.9% அதிகரித்து, 16,334 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 15,711 கோடி ரூபாயாகவும் இருந்தது.
விப்ரோ எதிர்பார்ப்பு
இதே வரி, வட்டிக்கு முந்தைய லாபம் 3,417 கோடி ரூபாயாக இருந்தது. மார்ஜின் விகிதம் 20.92% ஆகவும் இருந்தது. இது மிக நல்ல வளர்ச்சி என்றும், இது அடுத்த ஆண்டில் இருமடங்கு வளர்ச்சியை காணலாம் என்றும் விப்ரோ தெரிவித்துள்ளது. இதற்கிடையில் இதன் பங்கு விலையானது இன்று 2.80% அதிகரித்து 430.70 ரூபாயாக என் எஸ் இயில் முடிவடைந்துள்ளது. இதே பிஎஸ்இயில் 2.95% அதிகரித்து 431 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது.
அதிக ஒப்பந்தம்
மேலும் நிறுவனத்தின் நான்காவது சிறந்த காலாண்டாகும். குறிப்பாக நான்காவது காலாண்டில் மட்டும் இந்த நிறுவனம் 12 மிகப்பெரிய ஒப்பந்தங்களை செய்துள்ளதாகவும், அதன் மொத்த மதிப்பு 1.4 பில்லியன் டாலர் என்றும் கூறியுள்ளது. அதோடு விப்ரோ இன்னும் அதிக ஒப்பந்தங்களை எதிர்பார்ப்பதாகவும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி கூறியுள்ளார்.
விப்ரோவின் கையகப்படுத்தல்
விப்ரோவின் இந்த அறிக்கைகள் குறித்து அதன் தலைமை நிர்வாக அதிகாரியும், நிர்வாக இயக்குனருமான தியரி டெலாபோர்டே, வலுவான வருவாய் வளர்ச்சி, ஒப்பந்த வெற்றிகள் மற்றும் மார்ஜின் ஆகியவற்றில் மூன்றாவது காலாண்டாக நிலையான வளர்ச்சியினைக் கண்டுள்ளோம். அதோடு மிகப்பெரிய கையகப்படுத்தலான காப்கோவை கையகப்படுத்த உள்ளதாகவும் அறிவித்தோம்.
ஜூன் காலாண்டில் வளர்ச்சி விகிதம்
ஆக இந்த காலாண்டினை தொடர்ந்து ஜூன் காலாண்டிலும் வளர்ச்சி விகிதம் 2- 4% வளர்ச்சி காணும் என்றும் கூறியுள்ளார். அதோடு ஐடி சேவையில் எங்களின் வருவாய் 2.195 பில்லியன் டாலர் முதல் 2.238 பில்லியன் டாலர் வரை இருக்கலாம் என்றும் கூறியுள்ளார். மேலும் நாங்கள் கண்டு கொண்டிருக்கும் இந்த வளர்ச்சி குறித்து மகிழ்ச்சியடைகிறோம். அனைத்து முக்கிய சந்தைகளும் தற்போது வேகமாக வளர்ந்து வருகின்றன. இது அடுத்த ஆண்டு வளர்ச்சி விகிதங்களை உருவாக்குவதற்கான அடித்தளங்களை உருவாக்குகின்றன.


Click it and Unblock the Notifications