இந்தியாவின் 4வது பெரிய ஐடி சேவை நிறுவனமான விப்ரோவின் புதிய சிஇஓ ஸ்ரீனிவாஸ் பாலியா, நியமனம் ஐடி துறையில் பெரும் அதிர்ச்சி சம்பவமாகப் பார்க்கப்படும் வேளையில். தற்போது கிடைத்துள்ள தகவலைப் பார்த்தால் ஸ்ரீனிவாஸ் பாலியா-வின் நியமனம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாகத் தெரிகிறது.
தியரி டெலாபேர்ட் பதவியை ராஜினாமா செய்த அதே நாளில் ஸ்ரீனிவாஸ் பாலியா புதிய சிஇஓ-வாக நியமிக்கப்பட்டார். ஆனால் ஸ்ரீனிவாஸ் பாலியா-வின் நியமிக்கப்படுவதற்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்பே, விப்ரோ நிறுவனத்தில் அவர் வைத்திருந்த ரூ.5 கோடி மதிப்புள்ள பங்குகளை அனைத்தையும் பொதுச் சந்தையில் விற்றுள்ளார்.

பொதுவாக எந்த ஒரு மூத்த அதிகாரியும் தான் பணியாற்றும் நிறுவனத்தில் கொடுக்கப்பட்ட பங்குகளை விற்பனை செய்யமாட்டார், அதுவும் முக்கியமாக மொத்த பங்குகளையும் கட்டாயம் விற்கமாட்டார். இவை இரண்டுக்கும் மாறாக ஸ்ரீனிவாஸ் பாலியா சிஇஓ-வாக நியமனம் செய்யப்படுவதற்கு 1.5 மாதம் முன்பாக விப்ரோ பங்குகளை விற்பனை செய்துள்ளார்.
ஸ்ரீனிவாஸ் பாலியா தன்னிடம் இருந்த 1,00,000 விப்ரோ பங்குகளை இந்த ஆண்டு பிப்ரவரி 14 அன்று "மார்க்கெட் விற்பனை" மூலம் விற்பனை செய்ய அறிவித்துவிட்டு, பிப்ரவரி 15 ஆம் தேதி பரிவர்த்தனை செய்யப்பட்டு உள்ளதாகப் பங்குச்சந்தையில் தெரிவித்துள்ளார்.
இந்த பரிவர்த்தனையின் மொத்த மதிப்பு ரூ. 5,05,12,640. பங்குச்சந்தையில் தெரிவிக்கப்பட்டு உள்ள தகவலின்படி, இந்த பங்கு விற்பனைக்கு பின்பு ஸ்ரீனிவாஸ் பாலியா தற்போது வைத்திருக்கும் பங்குகள் பூஜ்ஜியமாக உள்ளன.
இந்த வாரம் விப்ரோ தனது காலாண்டு முடிவுகளை வெளியிட உள்ளதால் இதுகுறித்து எவ்விதமான அறிவிப்பையும் இதுவரையில் வெளியிடவில்லை, காலாண்டு முடிவுகளை வெளியிடுவதற்கு முன்பு அமைதிகாக்கிறது விப்ரோ.
ஏப்ரல் 6 ஆம் தேதி தியரி டெலாபேர்ட் பதவியை ராஜினாமா செய்த அதே நாளில் ஸ்ரீனிவாஸ் பாலியா புதிய சிஇஓ-வாக நியமிக்கப்பட்டார். ஸ்ரீனிவாஸ் பாலியா விப்ரோ நிறுவனத்தில் சுமார் 30 வருடங்களுக்கும் அதிகமாக பணியாற்றியுள்ளார்.
1992 இல் விப்ரோவில் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் பாலியா, விப்ரோவின் நுகர்வோர் வணிகப் பிரிவின் தலைவர் மற்றும் பிசினஸ் அப்ளிகேஷன் சர்வீசஸின் உலகளாவிய தலைவர் உட்படப் பல தலைமைப் பதவிகளை வகித்துள்ளார். கடைசியாக விப்ரோ நிறுவனத்தின் அமெரிக்காஸ் 1 வர்த்தக பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார்.
ஸ்ரீனிவாஸ் பாலியா தொடர்ந்து அமெரிக்காவில் இருந்தே பணியாற்ற உள்ளார். தியரி டெலாபோர்ட் சிஇஓ-வாக நியமிக்கப்பட்டத்திலிருந்து வெளிநாட்டில் இருந்து பணியாற்றியது அதிகளவில் விமர்சனம் செய்யப்பட்ட நிலையில் தற்போது ஸ்ரீனிவாஸ் பாலியா-வும் இதே பாணியில் இயங்க உள்ளார்.
புதிய தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றுள்ள ஸ்ரீனிவாஸ் பாலியா விப்ரோ நிறுவனத்துடன் புதிய சம்பள ஒப்பந்தம் செய்து கொள்வார். இந்த புதிய ஒப்பந்தத்தில் சிஇஓ-க்கான புதிய சம்பளம் கட்டமைக்கப்படும்.
பொதுவாக ஐடி நிறுவனங்களில், மூத்த தலைவர்களின் சம்பள அமைப்பு பல பகுதிகளைக் கொண்டுள்ளது - அடிப்படை சம்பளம், கொடுப்பனவுகள், போனஸ் அல்லது ஊக்கத்தொகை, வேரியபிள் மற்றும் செயல்திறன் அடிப்படையிலான பங்குகள், கட்டுப்படுத்தப்பட்ட பங்குகள் மற்றும் ESOPகள் (பணியாளர் பங்கு உரிமைகள்) போன்ற பல பிரிவுகளில் சம்பளம் வழங்கப்படும். இந்த நிலையில் ஸ்ரீனிவாஸ் பாலியா-வின் புதிய சம்பளம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications