ஐடி துறையில் வேலை வேண்டுமா.. விப்ரோ-வில் சூப்பர் வாய்ப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமீப காலமாக ஐடி நிறுவனங்களில் பணியமர்த்தல் குறித்தான பல அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், விப்ரோ, இன்ஃபோசிஸ், ஹெச் சி எல் டெக், உள்ளிட்ட நிறுவனங்கள் பணியமர்த்தலை செய்து வருகின்றன.

 

குறிப்பாக அனுபவம் வாய்ந்த ஊழியர்கள், பிரெஷ்ஷர்கள் என பலரையும் பணியமர்த்தி வருகின்றன.

பல நிறுவனங்களும் கேம்பஸ் இண்டர்வியூ மூலம் ஐடி மாணவர்களை தேர்தெடுத்து, அவர்களுக்கு பயிற்சியையும் கொடுத்து பணியமர்த்திக் கொண்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று வெளியான ஒரு அறிக்கையில் விப்ரோ நிறுவனம் ஆஃப் கேம்பஸ் மூலம் பணியமர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.

ஐடி ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. இனி சேலம், திருச்சி, மதுரை-க்கு கொண்டாட்டம்..!

யார் யார் விண்ணப்பிக்கலாம்

யார் யார் விண்ணப்பிக்கலாம்

இதற்கு முழு நேர பட்டதாரிகளாக கல்லூரிகளில் படித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மாறாக பகுதி நேரமாக படித்தவர்கள், தொலைத் தூர கல்வி மூலமாக படித்தவர்கள் இதற்கு தகுதியானவர்கள் அல்ல. ஆக தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது. இந்த விண்ணப்பங்களை இன்ஜினியரிங் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த ஆஃப் கேம்பஸ் ஆனது Elite National Talent Hunt 2.0 என்று அழைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

எப்படி தேர்தெடுக்கப்படுவார்கள்

எப்படி தேர்தெடுக்கப்படுவார்கள்

இதன் மூலம் விப்ரோ நாடு முழுவதும் உள்ள திறமையான இன்ஜினியரிங் மாணவர்களை பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளது. ஊழியர்கள் அவர்களின் திறனின் அடிப்படையில் தேர்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர். இதற்காக விப்ரோவால் ஆன்லைனில் தேர்வுகள் நடத்தப்படும். தேர்தெடுக்கப்பட்ட ஊழியர்களுக்கு சம்பளமாக வருடத்திற்கு 3,50,000 ரூபாய் வழங்கப்படும்.

கல்வி தகுதி
 

கல்வி தகுதி

பி.இ, பி டெக்., எம்.இ, எம்.டெக்., உள்ளிட்ட பட்டதாரிகள் தகுதியானவர்கள் ஆவர்.

பேஷன் டெக்னாலஜி, டெக்ஸ்டைல் இன்ஜினியரிங், விவசாயம் மற்றும் ஃபுட் டெக்னாலஜி உள்ளிட்ட துறை தவிர, மற்ற அனைத்து துறையினரும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் விண்ணப்பதார் 2020 மற்றும் 2021, 2022ல் கடைசியான வெளிவந்த பட்டதாரிகளாக இருக்க வேண்டும்.

அதேபோல அனைத்து பாடங்களிலும் 60% மேலாக மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.இது 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, டிப்ளமோ அல்லது பட்டதாரியாக இருக்க வேண்டும்.

முழு நேர பட்டதாரிகள் மட்டுமே தகுதியானவர்கள். அதிகபட்ச வயது 25 வயதாகும்.

 ஆன்லைனில் தேர்வு

ஆன்லைனில் தேர்வு

விண்ணப்பிக்கும் ஐடி பட்டதாரிகள் ஆன்லைனில் 128 நிமிடங்கள் இருக்க வேண்டியிருக்கும். இதில் ரிட்டர்ன் டெஸ்ட், கம்யூனிகேஷன் டெஸ்ட், ஆன்லைன் புரோகிராமிங், ஆப்டிடியூட் உள்ளிட்ட பலவும் நடக்கும்.

விண்ணபித்த பிறகு விண்ணப்பித்தவர்களுக்கு இண்டர்வியூ தேதி அனுப்பப்படும். இதனையும் தாண்டி ஏதேனும் சந்தேகம் இருந்தால்

helpdesk.recruitment@wipro.com. என்ற ஐடிக்கு அனுப்பலாம் என விப்ரோ தெரிவித்துள்ளது.

இன்றைய பங்கு விலை நிலவரம்?

இன்றைய பங்கு விலை நிலவரம்?

இதற்கிடையில் இன்று விப்ரோ நிறுவனத்தின் பங்கு விலையானது என்.எஸ்.இ-ல் சற்று அதிகரித்து 721.50 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இன்றைய உச்ச விலை 723.10 ரூபாயாகவும், இன்றைய குறைந்தபட்ச விலை 711.55 ரூபாயாகவும் உள்ளது.

இதே பி எஸ் இ-ல் சற்று அதிகரித்து, 721.55 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் 52 வார உச்ச விலை 739.80 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 387.75 ரூபாயாகும்.

Wipro opens to registrations for off campus hiring/விப்ரோவின் சூப்பர் திட்டம்.. ஆஃப் கேம்பஸில் பணியமர்த்தல்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: wipro விப்ரோ
English summary

Wipro opens to registrations for off campus hiring

Wipro opens to registrations for off campus hiring/விப்ரோவின் சூப்பர் திட்டம்.. ஆஃப் கேம்பஸில் பணியமர்த்தல்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X