இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான விப்ரோ இந்த ஆண்டு பிற ஐடி சேவை நிறுவனங்கள் போல் கடுமையான சரிவை சந்தித்தது. இதன் மூலம் ஜனவரி 1ஆம் தேதி முதல் சுமாப் 31.18 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. ஆனால் காலாண்டு முடிவுகளுக்கு பின்பு பெரும்பாலான ஐடி சேவை நிறுவன பங்குகள் உயர்ந்தாலும், விப்ரோ மோசமான முடிவுகள் மூலம் சரிவில் இருந்து மீண்டு வர முடியவில்லை.
இதன் விளைவாக அதன் சந்தை மதிப்பு குறைத்து தற்போது நிஃப்டி 50 குறியீட்டில் இருந்து வெளியேரும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. நிஃப்டி 50 குறியீட்டில் இருந்து செப்டம்பர் 30ஆம் தேதி முதல் விப்ரோ வெளியேற்றப்படுவதாக தேசிய பங்குச்சந்தை ஆணையம் தெரிவித்துள்ளது.

NSE ஒவ்வொரு அரையாண்டுக்கும் நிஃப்டி 50 குறியீட்டில் இருக்கும் நிறுவனங்களின் சந்தை மதிப்பை ஆய்வு செய்து டாப் 50 நிறுவனங்களை தொடர்ந்து ஆய்வு செய்து இப்பட்டியலை அப்டேட் செய்யும். இதன் படி செப்டம்பர் 29ஆம் தேதி வர்த்தகம் முடிந்த பின்பு செப்டம்பர் 30ஆம் தேதி இந்த மாற்றம் நடைமுறைக்கு வரும்.
விப்ரோ நிறுவனத்தின் இடத்தை தற்போது BSE பிடிக்கிறது, கடந்த 6 மாத ப்ரீ ப்ளோட் சந்தை மதிப்பீட்டின் படி மும்பை பங்குத்சந்தை நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1,40,879 கோடி ரூபாயாக உள்ளது, இதுவே விப்ரோ வெறும் 55,930 ரூபாயாக உள்ளது. இதன் மூலம் நிஃப்டி 50 குறியீட்டில் இருக்கும் நிறுவனங்களின் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் விப்ரோ, அதை விட 1.5 மடங்கு அதிக சந்தை மதிப்பு கொண்ட நிறுவனமான BSE, இந்த இடத்தை பிடித்துள்ளது.
மேலும் இந்த 50 வது இடத்தை பிடிக்க டிவிஎஸ் மோட்டார்ஸ் மற்றும் திவிஸ் லேப்ஸ் போட்டிப்போட்டு வரும் வந்த நிலையில் இரு நிறுவனங்களும் தத்தம் 84,566 கோடி மற்றும் 82,930 கோடி ரூபாய் மதிப்புடன் இருக்கும் காரணத்தால் BSE நிறுவனம் வலிமையுடன் நிஃப்டி 50 பட்டியலுக்குள் நுழைந்துள்ளது.
இதேபோல் BSE நிறுவனம் Nifty50 Equal Weight குறியீட்டிலும் விப்ரோ இடத்தில் நுழைகிறது. விப்ரோவுக்கு அடுத்தக்கட்டமாக தற்போது Nifty Next 50 குறியீட்டில் நுழைந்துள்ளது, செப்டம்பர் 30ஆம் தேதி விப்ரோ உடன் இக்குறியீட்டில் ஹிட்டாச்சி எனர்ஜி, பாலிகேப், வேதாந்தா அலுமினியம், வோடோபோன் ஐடியா ஆகியவையும் நுழைகிறது.
நிஃப்டி 50 குறியீட்டில் நுழைவது என்பது உள்நாட்டு மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்கள் முதல் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வரையில் அனைத்து தரப்பு முதலீட்டை பெறும் வாய்ப்பு கிடைக்கும். மேலும் பல முதலீட்டு நிறுவனங்கள் நிஃப்டி 50-ஐ முக்கிய பென்ச்மார்க் ஆக கருதும் காரணத்தாலும் இந்த மாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications

