இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் அனைத்தும் பல்வேறு பிர்சனைகளை எதிர்கொண்டு வருகிறது என மார்ச் காலாண்டு முடிவுகளில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சர்வதேச பொருளாதாரத்தின் மந்தமான வளர்ச்சிக்கு மத்தியில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய வங்கி பிரச்சனைகள் மத்தியில் இந்திய ஐடி சேவை துறை நிறுவனங்களின் லாபம் மற்றும் வருவாய் அளவுகள் பாதித்துள்ளது.
ஏற்கனவே டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல் ஆகிய 3 முன்னணி நிறுவனங்களும் மார்ச் காலாண்டு முடிவகளை விரைவில் வெளியிட்டு உள்ள நிலையில் ஏப்ரல் 23 ஆம் தேதி பங்குச்சந்தையில் சமர்ப்பித்த அறிக்கையில் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

இந்த அறிக்கையில் விப்ரோ நிர்வாகம் அடுத்த வரவிருக்கும் வாரத்தில் சந்தையில் இருக்கும் பங்குகளை பைபேக் செய்ய திட்டமிடவிடுவதாகவும், விப்ரோ நிர்வாக குழு இதற்காக ஆலோசனை செய்து வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதற்கான கூட்டம் நிறுவனத்தின் போர்டு ஆப் டைரக்டர்ஸ் மத்தியில் ஏப்ரல் 26- 27 ஆம் தேதிகளில் நடக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதே ஏப்ரல் 26- 27 தேதியில் விப்ரோ தனது மார்ச் காலாண்டு முடிவுகள் வெளியிடவும் திட்டமிட்டு உள்ளது. விப்ரோ பங்குகள் கடந்த ஒரு வருடத்தில் அதிகப்படியான பாதிப்பை எதிர்கொண்ட நிலையில் முதலீட்டாளர்களுக்கு தங்களின் முதலீட்டு மதிப்பை அதிகரிக்கவும், பங்கு முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை அளிக்கவும் பைபேக் திட்டத்தை அறிவிக்க உள்ளது விப்ரோ.
காலாண்டு முடிவுகளுக்கு முன்பே பைபேக் திட்டத்தை அறிவிக்கும் காரணத்தால் முதலீட்டாளர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இன்போசிஸ் காலாண்டு முடிவுகளில் ஈவுத்தொகையை அறிவித்தும் பெரிய இழப்பை பங்குச்சந்தையில் சந்தித்தது. ஆனால் இது விப்ரோ BuyBack திட்டம் மூலம் இதை சரி செய்ய முயற்சி செய்கிறது.
மேலும் விப்ரோ நிறுவன ஊழியர்களுக்கு இந்த ஆண்டுக்கான சம்பள உயர்வு என்பது மார்ச் காலாண்டு முடிவுகளையும், பைபேக் திட்டத்தின் அடிப்படையிலும் அமையும் என்றால் மிகையில்லை. விப்ரோ பங்குகள் கடந்த ஒருவருடத்தில் 30.48 சதவீதம் சரிந்துள்ளது, ஏப்ரல் 25 ஆம் தேதி 529.35 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 368 ரூபாயாக உள்ளது, இந்த பெரும் சரிவ சமாளிக்கத்தான் BuyBack திட்டம்.


Click it and Unblock the Notifications