பெங்களூரு கேம்பஸில் வாய்ப்பு.. விப்ரோ கொடுத்த சூப்பர் அப்டேட்.. யாருக்கெல்லாம்..!

நாட்டில் கொரோனாவுக்கு பிறகு ஐடி துறையில் வேலை வாய்ப்புகள் என்பது வெகுவாக அதிகரித்துள்ளது. இந்த போக்கு இன்னும் சில ஆண்டுகளுக்கு தொடரலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.

இதனை மெய்பிக்கும் விதமாக விப்ரோ, டிசிஎஸ், இன்ஃபோசிஸ், ஹெச்.சி.எல் டெக் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் கடந்த ஆண்டினை காட்டிலும் பணியமர்த்தலை அதிகரிக்க திட்டமிட்டுள்ளன.

இதற்கிடையில் தற்போது நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ நிறுவனத்தில் பணியமர்த்தல் குறித்தான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

பெங்களூரில் பணியமர்த்தல்

பெங்களூரில் பணியமர்த்தல்

குறிப்பாக இந்தியாவின் முன்னணி ஐடி நகரமான பெங்களூரில் பணியமர்த்தலை திட்டமிட்டுள்ளது. இது இணையம் சம்பந்தமான வேலை மற்றும் பல துறைகளுக்கும் பணியமர்த்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.

குறிப்பாக IoT-Architect- என்ற பணிக்கு ஆட்கள் தேவை என அறிவித்துள்ளது. அதுவும் அதன் பெங்களூரு கேம்பஸில் பணியமர்த்தவுள்ளது. இந்த துறை குறித்த திறனுள்ள ஊழியர்கள் தேவை என்றும், IoT-L3 அவசியமான ஒன்று எனவும் தெரிவித்துள்ளது.

அனுபவம்

அனுபவம்

loT Lead என்ற பணிக்கு குறைந்தபட்சம் 5 - 8 ஆண்டுகள் அனுபவம் உள்ள வர்களும், இதே IoT-Developer பணிக்கு குறைந்தபட்சம் 3 -5 ஆண்டுகள் அனுபவம் தேவை என அறிவித்துள்ளது. இது தவிர இன்னும் பல வேலைகளுக்கும் அறிவித்துள்ளது. இது குறித்து அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

பணியமர்த்தல் எங்கெங்கு

பணியமர்த்தல் எங்கெங்கு

பெங்களூரில் மட்டும் அல்ல, புனே, கொல்கத்தா, ஹைத்ராபாத் என பல நகரங்களிலும் பணியமர்த்தப்படவுள்ளனர். ஆக இது குறித்த முழு விவரங்களையும் https://careers.wipro.com/opportunities/jobs?sortBy=posted_date&descending=true&page=1 என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

பங்கு விலை

பங்கு விலை

விப்ரோ நிறுவனத்தின் பங்கு விலையானது என்.எஸ்.இ-யில் 1.49% அதிகரித்து, 653.70 புள்ளிகளாகவும், இதே பி.எஸ்.இ-யில் 1.60% அதிகரித்து, 653.95 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிண்றது.

இன்று அதிகபட்சமாக தற்போது வரையில் 666.40 ரூபாயாகவும், இதே குறைந்தபட்சமாக 650.05 ரூபாயாகவும் உள்ளது.

இதன் 52 வார உச்ச விலை 739.80 ரூபாயாகவும், இதன் 52 வார குறைந்தபட்ச விலை 348.30 ரூபாயாகவும் உள்ளது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+