மும்பை: இந்தியாவின் 4வது பெரிய ஐடி நிறுவனமான விப்ரோ நிறுவனம், அதன் திறமை வாய்ந்த ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ள அதிரடியான சில திட்டங்களை எடுத்துள்ளதாக தெரிகிறது.
விப்ரோ நிறுவனத்தின் இந்த நடவடிக்கையானது நிறுவனத்தினை விட்டு, சீனியர்கள் விட்டு வெளியேறிய நிலையில் வந்துள்ளது.
குறிப்பாக திறமை வாய்ந்த ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ள மூத்த அதிகாரிகள் உள்பட பலருக்கும் புரோமோஷன்களை வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது மூத்த ஊழியர்கள் மத்தியில் பெரும் சந்தோஷத்தினை ஏற்படுத்தியுள்ளது எனலாம். இது குறித்து வரவிருக்கும் காலாண்டு அறிக்கையில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மூத்த ஊழியர்கள் தவிர மற்ற ஊழியர்களுக்கும் ஏதேனும் அறிவிப்பு வெளியாகுமா? என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
உயர் அதிகாரிகள்?
12 உயர் அதிகாரிகளை மூத்த துணைத் தலைவராக பணி உயர்வு செய்ய திட்டமிட்டுள்ளது. இதில் 61 நிர்வாகிகளுக்கு துணை தலைவர் பதவியையும் கொடுத்து திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் 200 விபிக்கள், 32 SVPsக்களும் இந்த ஐடி நிறுவனத்தில் தியரி டெலாபோர்ட் உடன் உள்ளனர்
நாங்கள் ஒரு நிறுவனமாக வளர்ந்து வளர்ச்சியடையும்போது சரியான தலைமைத்துவம் இருப்பது அவசியம். இது நிறுவனத்தின் வளர்ச்சியினை ஊக்குவிக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
காலாண்டு முடிவு
விப்ரோ நிறுவனம் அதன் டிசம்பர் காலாண்டு முடிவினை வெள்ளிக்கிழமையன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வெள்ளிக்கிழமையன்று சந்தை முடிவுக்கு பிறகு முடிவுகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் காலாண்டிலேயே 725 மில்லியன் டாலர் ஆர்டர்களை பெற்றது. டிசம்பர் காலாண்டில் இந்த விகிதம் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்ப்பு
தொடர்ந்து பணியமர்த்தல் விகிதமும் குறைவாகவே உள்ள நிலையில், இது டிசம்பர் காலாண்டிலும் குறைவாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து எம்கே குளோபல் நிறுவனம் தனது கணிப்பில் வரிக்கு பிந்தைய லாபம், 2.3% அதிகரித்து, 3037.80 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 2969 கோடி ரூபாயாக இருந்தது.
நிகர விற்பனை
இதன் நிகர விற்பனையானது 15.5% அதிகரித்து, 23,468 கோடி ரூபாயாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஆண்டில் 20,313 கோடி ரூபாயாக இருந்தது. இதே எபிட்டா மார்ஜின் விகிதம் 19.2% ஆகவும், இது கடந்த ஆண்டில் 20.6% ஆகவும், இது 137 அடிப்படை புள்ளிகள் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாலரில் எப்படியிருக்கலாம்?
இதே டாலரில் வருவாய் விகிதமானது 0.6% ஆக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த காலாண்டில் வருவாய் வளர்ச்சி விகிதம் கடந்த காலாண்டினை காட்டிலும் 0.5 - 2% அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே எபிட்டா மார்ஜின் விகிதம் 40 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற நிபுணர்களின் கணிப்பு?
இதே கோடக் இன்ஸ்டிடியூசனல் ஈக்விட்டீஸ் நிறுவனம் 2% வரையில் வருவாய் அதிகரிக்கலாம் என கணித்துள்ளது. நிர்மல் பேங்க் நிறுவனமும் இதே கணிப்பினை வெளியிட்டுள்ளது. இதே நுவாமா இன்ஸ்டிடியூசனல் நிறுவனம் விப்ரோவின் லாபத்தினை கடந்த ஆண்டினை காட்டிலும் 2.8% அதிகரித்து, 3052 கோடி ரூபாய் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே வருவாய் விகிதம் 15.6% அதிகரித்து, 23,483 கோடி ரூபாயாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications