விப்ரோவின் அதிரடி அறிவிப்பு.. நல்ல சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொதுவாகவே ஐடி துறையில் கொரோனாவின் வருகைக்கு பிறகு பணியமர்த்தல் என்பது கணிசமாக அதிகரித்துள்ளது. இதற்கிடையில் நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், விப்ரோ, காக்னிசண்ட், ஹெச் சி எல் டெக் உள்ளிட்ட பல நிறுவனங்கள் கடந்த ஆண்டினை காட்டிலும் நடப்பு ஆண்டிலும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளன.

இது ஐடி துறையினருக்கு மிகப்பெரிய வாய்ப்பு எனலாம். சமீபத்தியில் வெளியான ஐடி செய்தியொன்றில், ஒரு ஊழியருக்கு பல வாய்ப்புகள் கிடைப்பதாகவும், அதில் எது சிறந்ததோ அதனை ஊழியர்கள் தேர்தெடுப்பதாகவும் கூறப்பட்டது.

இதனை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக ஐடி நிறுவனங்களில் அட்ரிஷன் விகிதமும் வரலாறு காணாத அளவு அதிகரித்துள்ளது.

பிரெஷ்ஷர்கள் பணியமர்த்தல்

பிரெஷ்ஷர்கள் பணியமர்த்தல்

இதனை கட்டுக்குள் வைக்கவும், நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ளவும் போராடி வருகின்றன. குறிப்பாக சில முறை சம்பள உயர்வு, பதவி உயர்வு, இன்னும் ஒரு படி மேலே போய் கேம்பஸ் மூலம் பிரெஷ்ஷர்களை எடுத்து, அவர்களுக்கு பயிற்சியும் அளித்து பணியில் அமர்த்திக் கொள்ள திட்டமிட்டு வருகின்றன. சில ஐடி நிறுவனங்கள் 12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு ஒரிரு வருட பயிற்குக்கு பிறகு தாங்களே பணியில் அமர்த்திக் கொள்கின்றன.

விப்ரோவின் அதிரடி

விப்ரோவின் அதிரடி

இதற்கிடையில் தான் தற்போது விப்ரோ நிறுவனம் பிரெஷ்ஷர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பில், வருடத்திற்கு 3.5 லட்சம் ரூபாய் வரையில் சம்பளம் கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இது பிரெஷ்ஷர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு என்றே கூறலாம்.

இன்ஜினியரிங் மாணவர்கள்
 

இன்ஜினியரிங் மாணவர்கள்

இது குறித்து விப்ரோ நிறுவனத்தின் அறிவிப்பில் இன்ஜினியரிங் மாணவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்த நிறுவனத்தின் இணைய தகவல் மூலம் பிஇ/பிடெக் , எம்இ/எம்டெக் ஊழியர்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி பணியமர்த்தல் அதிகரிக்கலாம்

இனி பணியமர்த்தல் அதிகரிக்கலாம்

கடந்த 2020ம் ஆண்டானது முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது சிறந்த ஆண்டாக இருந்தது. இந்த நிலையில் 2021 மற்றும் 2022ல் பணியமர்த்தல் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு, 12ம் வகுப்பு, இளநிலை பட்டதாரிகள் மற்றும் முதுகலை பட்டதாரிகள் 60% மார்க் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு என்ன?

வயது வரம்பு என்ன?

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு உண்டு என கூறப்படுகின்றது. இதில் அதிகபட்ச வயது 25 வயது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக இந்திய குடிமக்கள் அல்லது PIO அல்லது OIC கார்டாக இருக்க வேண்டும். பூடான் மற்றும் நோபளத்தினை சேர்ந்தவர்கள் தங்களது குடியுரிமை சான்றினை கொடுக்க வேண்டும்.

கடைசி தேதி

கடைசி தேதி

இவ்வாறு தேர்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் புராஜக்ட் பொறியாளர்கள் என்று நியமிகப்படுவார்கள்.அவர்கள் ஆண்டுக்கு 3.5 லட்சம் ரூபாய் சம்பளம் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக விண்ணப்பங்கள் பதிவு செய்வதற்கான கடைசி தேதி ஜனவரி 31, 2022 ஆகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எத்தனை பேர்?

எத்தனை பேர்?

பணியமர்த்தலுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டாலும், எத்தனை பேர் பணியமர்த்த உள்ளது, எங்கு பணியமர்த்தப்படுவார்கள் என்பது உள்ளிட்ட விவரங்கள் வெளியாகவில்லை. ஆக இது குறித்து இந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் தெரிந்து கொள்ளலாம். அதிலும் தற்போது ஓமிக்ரான் அச்சம் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், இது இனி வரும் காலாண்டுகளில் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் விப்ரோவின் இந்த அறிவிப்பு பிரெஷ்ஷர்களுக்கு பயனுள்ளதே.

இதற்கிடையில் கடந்த அமர்வில் விப்ரோவின் பங்கு விலையானது 0.56% அதிகரித்து, 698.45 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

wipro plans to hire freshes, offering up to Rs3.5 lakh per year

wipro plans to hire freshes, offering up to Rs3.5 lakh per year/விப்ரோவின் அதிரடி அறிவிப்பு.. நல்ல சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X