கொரோனா வைரஸ் ஒட்டு மொத்த உலகத்தையே ஸ்தம்பிக்க வைத்து இருக்கிறது என்று சொன்னால் அது மிகை இல்லை.
சில மாதங்களுக்கு முன்பு போல உலகம் இப்போது இயங்கவில்லை. வெளிநாடுகளுக்கு செல்வது எல்லாம் விடுங்கள். இப்போது சுதந்திரமாக, நம் ஊரில் தெரு முக்குக்குச் சென்று வர முடியாது என்றால் கொரோனாவின் சீரியஸ் புரியும். '
இந்த கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில், இந்திய பெரு நிறுவன முதலாளிகள் கை கோர்த்து இருக்கிறார்கள்.
இதுவரை
சமீபத்தில் தான் ஆனந்த் மஹிந்திரா தன் முழு சம்பளத்தை இந்த கொரோனாவுக்கு எதிரான போருக்கு வழங்கி இருக்கிறார். அதே போல, ரத்தன் டாடா, 1500 கோடி ரூபாய் வழங்க இருக்கிறார். அதே போல முகேஷ் அம்பானி சுமார் 500 கோடி ரூபாய் பிரதமரிடம் நன்கொடையாக வழங்கி இருக்கிறார்.
அசீம் ப்ரேம்ஜி
தற்போது இந்த வரிசையில், இந்தியாவின் மிகப் பெரிய ஐடி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோவும் களம் இறங்கி இருக்கிறது. விப்ரோ நிறுவனம் மற்றும் அசீம் ப்ரேம்ஜி ஃபவுண்டேஷன் இணைந்து 1,125 கோடி ரூபாயை கொரோனா வைரஸுக்கு எதிரான போருக்குச் செலவழிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
மருத்துவம் & சேவை
இந்த பணம் மருத்துவர்கள் இந்த கொடிய கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட உதவும் எனச் சொல்லி இருக்கிறார்கள். சமூகத்தின் அடித் தட்டு மக்கள், இந்த கொரோனா வைரஸால் பல்வேறு வழிகளில் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இந்த பாதிப்பை குறைக்கவும் இந்த பணம் உதவும் என விப்ரோ & அசீம் ப்ரேம்ஜி ஃபவுண்டேஷன் சொல்லி இருக்கிறது.
கணக்கு
இந்த 1,125 கோடி ரூபாயில், 100 கோடி ரூபாயை விப்ரோ நிறுவனமும், 25 கோடி ரூபாயை விப்ரோ எண்டர்பிரைசஸ் நிறுவனமும் 1,000 கோடி ரூபாயை அசீம் ப்ரேம்ஜி ஃபவுண்டேஷனும் கொடுக்க இருக்கிறார்களாம். கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் பெருந்தலைகள் அள்ளிக் கொடுப்பதை மக்கள் மனதார பாராட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications