அதிரடி காட்டிய விப்ரோ.. டிசம்பர் காலாண்டில் ரூ.2,968 கோடி லாபம்..!

ஐடி துறையில் முன்னணி நிறுவனமான விப்ரோ அதன் டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டு அறிக்கையினை வெளியிட்டுள்ளது. அதன் படி டிசம்பர் மாதத்தில் நிகரலாபம் 21 சதவீதம் அதிகரித்து, 2,968 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுவே முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 2,456 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதே இந்த நிறுவனத்தின் வருவாய் 15,670 கோடி ரூபாயாக மூன்றாவது காலாண்டில் அதிகரித்துள்ளது.

ஐடி சேவை மூலம் வருவாய்

ஐடி சேவை மூலம் வருவாய்

விப்ரோ அதன் ஐடி சேவையின் மூலம் 2102 - 2143 டாலர்கள் என்ற அளவில் வருவாயினை எதிர்பார்த்தது. ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப சேவைகளின் வருவாய் ஒரு வருடத்திற்கு முன்பு 15,101 கோடி ரூபாயாக இருந்த நிலையில், இன்று 15,333 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அதோடு இந்த நிறுவனம் ஐடி சேவை பிரிவில் 89 புதிய வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது.

இடைக்கால டிவிடெண்ட்

இடைக்கால டிவிடெண்ட்

இதற்கிடையில் இடைக்கால டிவிடெண்டாக ஒரு பங்கிற்கு 1 ரூபாயினை அறிவித்துள்ளது. இந்த நிறுவனத்தின் operating margin தொகையானது 21.7சதவீதம் அதிகரித்து, 243 புள்ளிகளாக விரிவாக்கம் அடைந்துள்ளது. இது ஆண்டு அடிப்படையில் 329 புள்ளிகளாக விரிவாக்கம் அடைந்துள்ளதாகவும் இந்த நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விப்ரோ பங்கு விலை

விப்ரோ பங்கு விலை

இதற்கிடையில் பிஎஸ்இ-யில் இதன் பங்கு விலையானது 0.2 சதவீதம் ஏற்றம் கண்டு, 458.80 ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது. இதே டிசம்பர் காலாண்டில் 23.2% பங்குகள் ஏற்றம் கண்டும், 2020ம் காலாண்டர் ஆண்டில் 57.1% ஏற்றம் கண்டும் காணப்படுகிறது. நிஃப்டி ஐடி குறியீடு முறையே நிஃப்டி ஐடி 21.55 சதவீதம் மற்றும் 55 சதவீதமும் ஏற்றம் கண்டுள்ளது.

விப்ரோவின் டாலர் வருவாய்

விப்ரோவின் டாலர் வருவாய்

விப்ரோ நிறுவனத்தின் டாலர் வருவாய் டிசம்பர் காலாண்டில் முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது, 3.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது முந்தைய காலாண்டில் 3.7 சதவீதமாக இருந்தது. இது குறித்து நிறுவனம் இந்த டாலர் வருவாய் 36 காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

அடுத்த காலாண்டில் எதிர்பார்ப்பு

அடுத்த காலாண்டில் எதிர்பார்ப்பு

கடந்த டிசம்பர் காலாண்டிலேயே டாலர் வருவாய் 2102 - 2143 மில்லியன் டாலர்களாகவும், இதே கடந்த டிசம்பர் காலாண்டுடன் ஒப்பிடும்போது 1.5 - 3.5 சதவீதம் அதிகரித்துள்ளது. விப்ரோ தொடர்ச்சியாக இரண்டாவது காலாண்டாக வலுவான வளர்ச்சியினை காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+