இன்போசிஸ் நிறுவனத்தை தொடர்ந்து விப்ரோ-வும் இன்று 2026 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டு முடிவுகளை பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியிட்டது. இக்காலாண்டில் இந்நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 1.2 சதவீதம் வருடாந்திர அடிப்படையில் வளர்ச்சி அடைந்து 3,246 கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 3,209 கோடி ரூபாயாக இருந்தது.
இதேபோல் இக்காலாண்டில் செயல்பாட்டு வருவாய் 1.8 சதவீதம் உயர்ந்து 22,697 கோடி ரூபாயாக உள்ளது, இது முந்தைய ஆண்டின் 22,302 கோடி ரூபாயிலிருந்து அதிகமாகும்.

மேலும் டாலர் அடிப்படையில் விப்ரோவின் மொத்த வருவாய் 2,556.6 மில்லியன் டாலராக உள்ளது. அதன் முக்கிய பிரிவான ஐடி சேவைகளின் வருவாய் 2,604.3 மில்லியன் டாலராக உயர்ந்து, காலாண்டு அடிப்படையில் 0.7 சதவீத வளர்ச்சியையும், வருடாந்திர அடிப்படையில் 2.1 சதவீத வீழ்ச்சியையும் கண்டுள்ளது.
இதை தொடர்ந்து நிலையான நாணய அடிப்படையில், ஐடி சேவைகளின் வருவாய் காலாண்டு அடிப்படையில் 0.3 சதவீதம் உயர்ந்தாலும், வருடாந்திர அடிப்படையில் 2.6 சதவீதம் குறைந்துள்ளது. முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது, நிகர லாபம் 2.5 சதவீதம் குறைந்து 3,246 கோடி ரூபாயாக உள்ளது, அதேசமயம் மொத்த வருவாய் 2.5 சதவீதம் உயர்ந்து 22,697 கோடி ரூபாயாக உள்ளது என அறிவித்துள்ளது.

விப்ரோ சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஹார்மன் டிஜிட்டல் டிரான்ஸ்ஃபார்மேஷன் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தை வாங்கியது. இதில் இருந்து எதிர்பார்க்கப்படும் வருவாயை சேர்க்கவில்லை என இந்நிறுவனம் தனது காலாண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இக்காலாண்டில் விப்ரோ நிறுவனம் மொத்தம் 4,688 மில்லியன் டாலர்கள் மத்திப்பிலான ஒப்பந்தங்களை பெற்றுள்ளது.இது காலாண்டு அடிப்படையில் 6.1 சதவீதம் குறைந்தாலும், வருடாந்திர அடிப்படையில் 30.9 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இதில் பெரிய ஒப்பந்தங்களின் மதிப்பு 2,853 மில்லியன் டாலர்களாக உயர்ந்து, காலாண்டு அடிப்படையில் 6.7 சதவீதமும், வருடாந்திர அடிப்படையில் 90.5 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளது.
விப்ரோ நிறுவனத்தின் சிஇஓ இன்று காலாண்டு முடிவுகளை வெளியிடும் போது, பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கும், செய்தியாளர்களிடம் பேசும் போது, தற்போது உலகளாவிய வாடிக்கையாளர்கள் மாறிவரும் வர்த்தக கொள்கைகளின் காரணமாக மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து வருகின்றனர் என குறிப்பிட்டார்.
வரி விதிப்பு காரணமாக உலகளவில் நிச்சயமற்ற சந்தையாக இருக்கும் காரணத்தால், நுகர்வோர், எனர்ஜி மற்றும் உற்பத்தித் துறைகளில் தொடர்ந்து பாதிப்பு இருந்து வருவதாகவும், இதனால் நிறுவனங்கள் தங்கள் சர்வதேச விநியோக சங்கிலிகளை தொடர்ந்து ஆய்வு செய்து பன்முகப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவதாகவும், அக்டோபர் 16 அன்று நடைபெற்ற நிறுவனத்தின் வருவாய் பத்திரிகையாளர் சந்திப்பில் விப்ரோ சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குநரான ஸ்ரீனிவாஸ் பல்லியா தெரிவித்தார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications