பெங்களூரு: இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ ரஞ்சிதா கோஷை சர்வதேச தலைமை மார்கெட்டிங் பிரிவு அதிகாரியாக நியமனம் செய்துள்ளது.
பிப்ரவரி 1ஆம் தேதியிலிருந்து ரஞ்சிதா கோஸ் இந்த பொறுப்பினை ஏற்பார் என்றும் அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது என்றும் விப்ரோ நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 1ஆம் தேதியிலிருந்து சர்வதேச சந்தைப்படுத்துதல் பிரிவு தலைவராக செயல்பட போகும் ரஞ்சிதா கோஸ் தலைமை அதிகாரிகளில் ஒருவரான ஹரி செட்டியின் மேற்பார்வையின் கீழ் வருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விப்ரோ லிமிடெட் நிறுவனத்தின் அனைத்து பிரிவுகளுக்குமான சந்தைப்படுத்துதல் துறைக்கு இவர் தலைவராக செயல்படுவார் என்றும் நிறுவனத்தின் பிராண்டிங்கை புதிய நிலைக்கு கொண்டு செல்வார் என்றும் நம்பிக்கை இருப்பதாக விப்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது விப்ரோ நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு தலைவராக செயல்படக்கூடிய லாரா லாங்டன் விப்ரோ நிறுவனத்தை விட்டு வெளியேற இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். எனவே தான் அவருக்கு பதிலாக ரஞ்சிதா கோஷுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் நான்காவது பெரிய ஐடி சேவை நிறுவனமாக விப்ரோ செயல்பட்டு வருகிறது. கடந்த 12 மாத காலத்தில் விப்ரோ நிறுவனத்தில் சுமார் 12க்கும் அதிகமான மூத்த அதிகாரிகள் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளனர். கடந்த ஏப்ரல் விப்ரோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்த தியரி டெலபோர்ட்டே திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை அடுத்து ஸ்ரீநிவாஸ் பல்லையாவுக்கு அந்த பொறுப்பு வழங்கப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் தியரி டெலபோர்ட்டே பதவி விலகியதை அடுத்து விப்ரோவில் சுமார் 12க்கும் அதிகமான மூத்த நிலை அதிகாரிகள் நிறுவனத்தை விட்டு வெளியேறினர்.
தற்போது விப்ரோ நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பு வகித்து வரக்கூடிய ஸ்ரீநிவாஸ் பல்லையா நிறுவனத்தில் மூத்த நிலையில் இருக்கும் ஊழியர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கி வருகிறார்.
விப்ரோ நிறுவனத்தின் ஆசிய பசிபிக் பிரிவுக்கான மார்க்கெட்டிங் பிரிவு தலைவராக செயல்பட்டு வந்தவர் தான் ரஞ்சிதா கோஷ். இவர் தற்போது ஒட்டுமொத்த மார்க்கெட்டிங் பிரிவுக்கும் தலைவராக மாறியிருக்கிறார். இந்த பிரிவில் இவருக்கு கிட்டதட்ட 20 ஆண்டுகாலம் அனுபவம் இருப்பதாக விப்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
1945ஆம் ஆண்டு அசிம் பிரேம்ஜி அவர்களால் தொடங்கப்பட்ட ஐடி நிறுவனம் தான் விப்ரோ. தற்போது சுமார் 2.32 லட்சம் பேர் இதில் பணிபுரிகின்றனர்.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications