இந்தியாவின் 4வது பெரிய ஐடி சேவை நிறுவனமான விப்ரோ வியாழக்கிழமை தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது, டிசிஎஸ், ஹெச்சிஎல் நிறுவனத்தை தொடர்ந்து விப்ரோ ஜூன் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் ஐடி நிறுவன சிஇஓ-வாக இருக்கும் தியரி டெலாபோர்டே ஜூன் காலாண்டில் என்ன செய்துள்ளார் வாங்க பார்ப்போம்.
ஜூன் காலாண்டில் விப்ரோ நிறுவனம் வருடாந்திர அளவில் 12 சதவீத உயர்வில் சுமார் 2870 கோடி ரூபாய் லாபத்தை பெற்றுள்ளது, இதேபோல் வருவாய் அளவும் வருடாந்திர அடிப்படையில் 6 சதவீதம் உயர்ந்து 22,831 கோடி ரூபாயாக உள்ளது. நிலையான நாணய மதிப்பீட்டளவில் மார்ச் காலாண்டை ஒப்பிடுகையில் ஜூன் காலாண்டில் 3 சதவீதம் குறைவான வருமானத்தை பெற்றுள்ளது விப்ரோ.

விப்ரோ நிறுவனத்தின் ஆப்ரேட்டிங் மார்ஜின் அளவு ஜூன் காலாண்டில் 16 சதவீதம் உயர்ந்துள்ளது, வருடாந்திர அடிப்படையில் 1.12 சதவீதம் உயர்ந்தாலும், காலாண்டு அடிப்படையில் 0.03 சதவீதம் சரிந்துள்ளது. டிசிஎஸ், ஹெச்சிஎல் நிறுவனங்களை ஒப்பிடுகையில் லாபம், வருவாய் அளவில் சரிந்தாலும், ஆப்ரேட்டிங் மார்ஜின் அளவில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
ஜூன் காலாண்டு முடிவில் விப்ரோ நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 2,49,758 ஆக உள்ளது, மார்ச் காலாண்டை ஒப்பிடுகையில் சுமார் 8812 ஊழியர்கள் ஜூன் காலாண்டில் அதிகரித்துள்ளனர். விப்ரோ நிறுவனத்தின் அட்ரிஷன் அளவு 19.4 சதவீதத்தில் இருந்து 17.3 சதவீதமாக குறைந்துள்ளது.
மேலும் விப்ரோ நிறுவனத்தின் பிராந்திய வர்த்தகத்தில் அமெரிக்கா 2 பகுதி வர்த்தகம் 3.7 சதவீதமும், ஐரோப்பாவில் 1.5 சதவீதமும் சரிந்துள்ளது. துறை வாரியான வர்த்தகத்தில் BFSI, எனர்ஜி, கன்ஸ்யூமர் துறை ஆகியவை தலா 3 சதவீதத்திற்கும் மேல் சரிந்துள்ளது. உற்பத்தி துறை வர்த்தகம் மட்டும் 1.4 சதவீதம் உயர்ந்துள்ளது.
இன்றைய வர்த்தக முடிவில் விப்ரோ பங்குகள் 0.6 சதவீதம் உயர்ந்து 394.30 ரூபாய் அளவீட்டில் உள்ளது.


Click it and Unblock the Notifications