இந்தியாவின் 4வது பெரிய ஐடி சேவை நிறுவனமான விப்ரோ புதன்கிழமை மாலை வர்த்தக நேரம் முடிந்த பின்பு செப்டம்பர் 30 உடன் முடிவடைந்த காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. டிசிஎஸ், ஹெச்சிஎல் காலாண்டு முடிவுகள் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை கொடுத்த நிலையில், இன்போசிஸ் முடிவுகள் பலருக்கும் அதிர்ச்சி கொடுத்தது.
இந்த நிலையில் விப்ரோ காலாண்டு முடிவுகளை அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்த படியே மிகவும் குறைவான வளர்ச்சி பதிவு செய்து பேரதிர்ச்சியை கொடுத்தது. விப்ரோ நிறுவனம் செப்டம்பர் காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாபமாக 2,667.3 கோடி ரூபாயை பெற்றுள்ளது.

இது கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் வெறும் 0.70 சதவீத உயர்வை மட்டுமே பதிவு செய்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே செப்டம்பர் காலாண்டில் விப்ரோ நிறுவனம் 2,649.10 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை மட்டுமே பெற்று இருந்த நிலையில் இந்த வருடம் 2,667.3 கோடி ரூபாயை லாபமாக பெற்றுள்ளது.
செப்டம்பர் காலாண்டில் விப்ரோ நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் கிடைக்கும் ஒருங்கிணைந்த வருவாய் 22,515.90 கோடி ரூபாயாக உள்ளது. இது முந்தைய ஆண்டில் 22,539.70 கோடி ரூபாயாக இருந்த நிலையில் வருவாய் அளவு 0.10% குறைந்துள்ளது.
விப்ரோ நிறுவனத்தின் IT சேவைகள் பிரிவின் வருவாய் 2,713.3 மில்லியன் டாலராகவும், இது ஜூன் காலாண்டை ஒப்பிடுகையில் 2.3% குறைந்துள்ளது. அதே நேரத்தில் நிலையான நாணய வருவாய் காலாண்டு அடிப்படையில் 2% குறைந்துள்ளது. மேலும் விப்ரோ நிறுவனத்தின் IT சேவைகள் பிரிவு மொத்த EBIT அளவு இக்காலாண்டில் வருடாந்திர அடிப்படையில் 6% அதிகரித்து ரூ.3,610 கோடியாக இருந்தது. விப்ரோ நிறுவனத்தின் ஐடி ப்ராடெக்ட்ஸ் பிரிவின் வருவாய் 14,700 கோடி ரூபாயாக ஆக இருந்தது.
செப்டம்பர் காலாண்டில் விப்ரோ நிறுவனத்தின் ஆப்ரேட்டிங் மார்ஜின் அளவு 16.1 சதவீதமாக இருந்தது. இக்காலக்கட்டத்தில் புதிதாக பெற்ற வர்த்தகத்தின் மதிப்பு 3.8 பில்லியன் டாலராக இருந்தது, இதில் பெரிய டீல்களின் மதிப்பு 1.3 பில்லியன் டாலராகும்.
விப்ரோ நிறுவனத்தின் ஊழியர்கள் வெளியேற்ற விகிதம் கடந்த 9 காலாண்டில் குறைவான அளவான 13.4 சதவீதமாக உள்ளது. இது மிகவும் முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இன்றைய வர்த்தக முடிவில் விப்ரோ நிறுவன பங்குகள் தேசிய பங்குச்சந்தையில் 0.95 சதவீதம் சரிந்து 407.50 ரூபாயாக உள்ளது.


Click it and Unblock the Notifications