பெங்களூரைச் சேர்ந்த முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ நிறுவனம் அதன் 2025ஆம் நிதியாண்டிற்கான செப்டம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. அதில் நிறுவனத்தின் லாபம் 21 சதவீதம் அதிகரித்து ரூ.3,209 கோடியை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.2,646 கோடியாக இருந்தது. அதே நேரத்தில் நிறுவனம் அதன் முதலீட்டாளர்களுக்கு 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்கவும் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
லாபம் அதிகரித்தாலும், ஜூலை-செப்டம்பர் காலாண்டில் நிறுவனத்தின் வருவாயிலிருந்தது 1 சதவீதம் சிறிய சரிவு ஏற்பட்டுள்ளது. இது ரூ.22,302 கோடியாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவனத்தின் வருவாய் ரூ.22,543 கோடியாக இருந்தது. நிறுவனம் சந்தை மதிப்பீடுகளை விட அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் ஸ்ரீனி பாலியா கூறுகையில், இந்த Q2 இல் வலுவான செயல்பாட்டின் அடிப்படையில், வருவாய் வளர்ச்சி, முன்பதிவுகள் மற்றும் மார்ஜின்கள் ஆகியவற்றிற்கான எங்கள் எதிர்பார்ப்புகளை நாங்கள் பூர்த்தி செய்துள்ளோம் என்றும், பெரிய ஒப்பந்த முன்பதிவுகள் மீண்டும் 1 பில்லியன் டாலர்களை தாண்டியது என்றும் கூறியுள்ளார்.
மேலும், BFSI, நுகர்வோர் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்புத் துறைகளில், நான்கு சந்தைகளில் மூன்றில் வளர்ச்சியடைந்துள்ளதாகவும், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வலுவான AI உடன் இயங்கும் விப்ரோவை உருவாக்குவதற்கும் நாங்கள் தொடர்ந்து முதலீடு செய்வோம் என்று ஸ்ரீனி பாலியா கூறினார்.
விப்ரோவின் ஐடி சேவைகளின் செயல்பாட்டு வரம்பு காலாண்டில் 16.8 சதவீதமாக இருந்தது. காலாண்டில் 0.3 சதவீதம் மற்றும் ஆண்டுக்கு ஆண்டு 0.7 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், வியாழன் முடிவு அறிவிப்புக்கு முன்னதாக, விப்ரோ பங்குகள் ரூ.3.45% சரிந்து 528.7 ரூபாயில் வர்த்தகம் முடிந்தது.


Click it and Unblock the Notifications