இந்திய ஐடி சேவை துறையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் விப்ரோ நிறுவனம் பெரும் தடுமாற்றத்திற்குப் பின்பு டிசம்பர் 31 உடன் முடிந்த காலாண்டில் சிறப்பான நிதிநிலையை வெளியிட்டுள்ளது. சிஇஓ வெளியேற்றம் முதல் ஊழியர்கள் பணிநீக்கம் வரையில் பல தடுமாற்றத்தை விப்ரோ நடப்பு நிதியாண்டில் சந்தித்தது.
இந்த நிலையில் விப்ரோ-வின் டிசம்பர் காலாண்டின் நிகர லாபம் 24% அதிகரித்து ரூ.3,354 கோடியாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், விப்ரோவின் இயக்க வருவாய் வெறும் 0.5% அதிகரிப்புடன் ரூ.22,319 கோடியாக உயர்ந்துள்ளது.

கடந்த காலாண்டை ஒப்பிடும்போது, வரிக்கு பிந்தைய லாபம் (PAT) கிட்டத்தட்ட 5% அதிகரித்துள்ளது மற்றும் ஆனால் வருவாய் 0.1% லேசான அதிகரிப்பைக் கண்டுள்ளது. இக்காலாண்டு முடிவுகள் குறித்து விப்ரோ சிஇஓ ஸ்ரீனி பலியாக கூறுகையில் கடந்த 3 வருடத்தில் இந்த டிசம்பர் காலாண்டில் சிறப்பான லாப விகிதத்தைப் பதிவு செய்துள்ளோம், இதேவேளையில் வருவாய் வளர்ச்சி இலக்கை எடுத்தும் பாதையில் தற்போது உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் காலாண்டில் இன்போசிஸ் நிறுவனம் 11% உயர்வில் ரூ.6,806 கோடி லாபத்தையும், டிசிஎஸ் 12% உயர்வில் ரூ.12,380 கோடி லாபத்தையும், ஹெச்சிஎல் நிறுவனம் 6% உயர்வில் ரூ.4,591 கோடி லாபத்தைப் பதிவு செய்துள்ள நிலையில் விப்ரோ 24 சதவீதம் உயர்வில் 3354 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்றுள்ளது.
விப்ரோ லாபத்தின் அளவு குறைவாக இருந்தாலும், லாபத்தில் பதிவான வளர்ச்சி அளவீடு சிறப்பாக உள்ளது. ஸ்ரீனி பலியாக தலைமையிலான நிர்வாகம் லாபத்தை அதிகரிக்கும் வகையில் நிர்வாக பணிகளை மறுசீரமைப்பு செய்து செலவுகளைக் குறைத்துள்ளது. ஆனால் வருவாய் வெறும் 0.5 சதவீதம் மட்டும் உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை முதலீட்டாளர்களுக்கு அளித்துள்ளது.
விப்ரோ நிறுவனத்தின் IT சேவைகள் பிரிவின் வருவாய் வருடாந்திர அடிப்படையில் வெறும் 1% அதிகரித்து $2.6 பில்லியனாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் கடந்த காலாண்டை ஒப்பிடும்போது 1.2% குறைந்துள்ளது திங்கட்கிழமை பங்குச்சந்தை வர்த்தகத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்த காலாண்டில் IT சேவைகளின் இயக்க இலாப விகிதம் அதாவது Profit margin 17.5% ஆக இருந்தது, இது கடந்த காலாண்டு அடிப்படையில் ஒப்பிடும்போது 0.7% மற்றும் வருடாந்திர அடிப்படையில் 1.5% அதிகரித்துள்ளது.
இந்த காலாண்டில் விப்ரோ நிறுவனம் மொத்தம் 3.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளது. இதில் பெரிய ஒப்பந்தங்கள் மதிப்பு 961 மில்லியன் டாலராக உள்ளது. இது நிலையான நாணய மதிப்பீட்டில் வருடாந்திர அடிப்படையில் 6% அதிகரித்துள்ளது.
கடந்த 12 மாதங்களில் விப்ரோ நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதம் 15.3% ஆக இருக்கிறது என டிசம்பர் காலாண்டு முடிவில் தெரிவித்துள்ளது.
மேலும் இந்நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு பங்குதாரர்களுக்கு 6 ரூபாய் இடைக்கால ஈவுத்தொகையை அளிக்க ஒப்புதல் அளித்துள்ளதாக இக்காலாண்டு முடிவில் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஈவுத்தொகைக்கான பதிவு நாள் ஜனவரி 28, 2025 ஆகும். ஈவுத்தொகை பிப்ரவரி 15, 2025 அல்லது அதற்கு முன் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications