இந்திய ஐடி சேவைத் துறையில் அதிகப்படியான பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் நிறுவனமாக விப்ரோ திகழ்கிறது. இந்தியாவிலேயே அதிகப்படியான சம்பளத்தை வாங்கும் சிஇஓ-வை வைத்துக்கொண்டு உயர் அதிகாரிகளை அடுத்தடுத்து இழப்பது மட்டும் அல்லாமல் புதிய வர்த்தகத்தை அதிகளவில் பெற முடியாமல் மாட்டிக்கொண்டு உள்ளது.
இந்த நிலையில் ரிஷாத் பிரேம்ஜி தலைமையிலும், சிஇஓ தியரி டெலாபோர்டே தலைமையிலும் இயங்கும் விப்ரோ டிசம்பர் 31 ஆம் தேதி முடிவடைந்த காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளது.

இக்காலாண்டில் விப்ரோ நிறுவனம் 2,694 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலாண்டைக் காட்டிலும் 12 சதவீதம் குறைவாகும், இதேபோல் 2023 செப்டம்பர் காலாண்டை ஒப்பிடுகையில் வெறும் 1 சதவீதம் அதிகமாகும்.
மேலும் டிசம்பர் காலாண்டில் விப்ரோ நிறுவனத்தின் வருவாய் 22,205 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலாண்டைக் காட்டிலும் 4.4 சதவீதமும், செப்டம்பர் காலாண்டை ஒப்பிடுகையில் 1.4 சதவீத குறைவான அளவீடாகும்.
டிசம்பர் காலாண்டில் விப்ரோ சுமார் 3.8 பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டத்தைக் கைப்பற்றியுள்ளது, இது செப்டம்பர் காலாண்டை ஒப்பிடுகையில் வெறும் 0.2 சதவீதம் மட்டுமே அதிகம். வருடாந்திர அடிப்படையில் 13.5 சதவீதம் குறைவாகும்.
டிசம்பர் காலாண்டில் 100 மில்லியன் டாலருக்கு அதிக மதிப்புடைய 22 வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது, 75 மில்லியன் டாலருக்கு மேல் 31 வாடிக்கையாளர்களையும் பெற்றுள்ளது. இதன் மூலம் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 1,349 ஆக உள்ளது. மேலும் டாப் 10 வாடிக்கையாளர்களிடம் இருந்து மட்டுமே 20.5 சதவீத வருவாயைப் பெற்று வருகிறது.
விப்ரோ நிறுவனத்தின் ஊழியர்கள் வெளியேற்ற விகிதம் 10 காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு 12.3 சதவீதமாகக் குறைந்துள்ளது. விப்ரோ டிசம்பர் காலாண்டில் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 4,473 பேர் குறைந்து 2,40,234 ஊழியர்களைக் கொண்டு இயங்கி வருகிறது.
More From GoodReturns

இன்போசிஸ் தலையெழுத்தை மாற்றப்போகும் புது CEO.. சலில் பாரிக் நிலைமை என்ன..?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications